பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 1ா திருக்கோவையார் உரைநடை வெறியாட்டால் (இவ்விளர்ப்பு) நிறம் ஒழியுமாயின் தலைவனுக்கு நாம் என்ன சொல்லக்கூடும். ஆதலால் இரண்டு காரணத்தாலும் நான் உயிர் வாழ வழி இல்லை” என்று தன் நெஞ்சொடு கூறி வருத்தம் (இன்னல்) எய்தினுள். 23. வெறி விலக்குவிக்க நினைதல் (288. சென்ருர்) இருவாற்ருலும் உயிர் வாழ வழி இல்லை என்று கருதி வருத்தமுற்ற தலைவி தலைவரால் எனக்கு உண்டாகிய இந்நோயைப் பிறர் தீர்ப்பர் என்பது வெகு அழகாயிருக்கின்றது என்ளுேடு ஒன்றுபட்ட தோழி யிடம் நாணினுற் சொல்ல முடியவில்லை. சொல்லா விட்டாலும் வேறு வழியால் உயிர் வாழேன். ஆதலால் என்னுடைய (மறையை) இரகசியத்தைத் தோழிக்கு உரைப்பேன்’ என்று தன் மனத்துள் ஒரு முடிவுக்கு வந்து தோழியைக் கொண்டு வெறி விலக்குவிக்க நினைத்தாள். 24. அறத்தொடு நிற்றலை யுரைத்தல் (289. யாயும்) நாண் துறந்தும் மறை உரைத்தும் வெறி விலக்கு விக்க நினைத்து, அறத்தொடு நிற்பாளாய்த் தோழியை நோக்கி 'தில்லை வாழ்த்துவாரைப்போல நான் துரயேன், நான் சொல்லுவதை நீ நம்பாவிட்டால் நான் கடுமை யான குளு றவைத் தருவேன் (சத்தியம் செய்து கொடுப் பேன்) தாய் வெகுண்டாலும் சரி, அயலார் ஏசினலும் சரி, ஊர் சிரித்தாலும் சரி, நீயும் வெகுண்டாலும் சரி நடந்ததை உண்மையாகக் கூறுவேன் கேட்பாயாக’ என்று கூறித் தோழியிடம் தலைவி அறத்தொடு நின்ருள். 25. அறத்தொடு நிற்றல் (290. வண்டலுற்றேம்) அறத்தொடு நிற்பாளாய் யாம் முன்பு ஒருநாள் கடற்கரையில் வண்டல் செய்து விளையாடும் பொழுது