பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங். வேந்தற் குற்று மிப் பிரிவு J}, O Gir" உப்பும் போல இவ்வாறு மனம் உருகித் தனிமையுற்று வருந்தாது ஒழி. தலைவனுடைய போக்குப் பொய் என்று கூறித் தோழி அவளது வருத்தத்தைத் தணிவித்தாள். குறிப்பு: உஉ. பகை தணி வினேப்பிரிவு’ என்னும் இவ்' வதிகர்ரம் 1. பிரிவு கூறல் முதலான 3 துறைகளைக் கொண்டு. முடிகின்றது. உக. வேந்தற் குற்றுழிப் பிரிவு வேந்தற் குற்றுழிப்பிரிவு என்பது ஒரு வேந்தனுக் கொரு வேந்தன் தொலைந்து தம்மை வந்தடைந்தால் அவனுக்குதவி செய்யத் தலைவன் பிரிவது. 1. பிரிந்தமை கூறல் (316. போது குலாய) தம்மை வந்தடைந்த வேந்தரின் பாசறைக்கு. நம் தலைவர் சென்ருர். இனி அவ்வேந்தரின் பகை வரால் இடப்பட்ட மதில் இன்று யாதாய் முடியுமோ என்று தோழி தலைவியிடம் தலைவன் வேந்தற் குற்றுழிப் போந்ததைக் கூறினள். 2. பிரிவாற்ருமை கார்மிசை வைத்தல் (317. பொன்னி) தலைவனுடைய பிரிவைக் கேட்ட தலைவி தனது வருத்தங் கண்டு காதலர் வினை.வயிற் பிரிய நீ வருந்தி ல்ை வினை முடியுடிாறென்னே என்ற தோழிக்கு, யான் அவர் பிரிந்ததற்கு வருந்துகின்றேனல்லேன்; 'பகை வரைக் கிட்டிப்போன நம் தலைவருக்கு இந்தப் பெரிய முகில் பாசறைக்கண் சென்று தோன்றுமோ? அப்படித் தோன்றுமாயின் நம்மை நினைந்து ஆற்ருராய் எடுத்த வினையை முடிக்க " மாட்டார் என்று அதற்கு வருந்து