பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

h அ ஆ அ திருக்கோவையார் உரைநடை செக்கர்மகுல அவள் (தலைவி) பொறுக்குமளவு அன்று என்று இரங்கிக் கூறினன். 16. பருவங் கண்டு இரங்கல் (347. கண்ணுழையாது) ஏறுவரவு கண்டு இரக்கமுற்ற தலைவன், 'இம்முகில் கள் ஒன்ருே டொன்று விரவுதலால், கண் சென்று நுழையமாட்டாது; மலரைஉடைய இடமெங்கும் மயி லினங்கள் திரண்டு பீலியை விரித்து நின்று ஆடா நிற்கும். இக்கார் காலத்தில் அவள் (தலைவி) என்னை நினைந்து ஆற்ருளாங் கொல்லோ' என்று அப்பருவங் கண்டு இரங்கினன். 17. முகிலொடு கூறல் (348. அற்படு) பருவங்கண்டு இரங்கி, விரைவோடு வாரா நின்ற தலைவன் இங்கு முற்பட்டாயாயினும் முகிலே! நீ முது பெண்டிர் திரண்டு தலைவியின் துயரத்தை நீக்கும் பொருட்டு மலர்கள் துரவி நெல் விரவிய துரய பலியைக் கொடுத்து இல்லுறை கடவுட்குப் பூசனை செய்யும் பெரிய நகரத்திற்கு என்னின் முற்படாது ஒழிவாயாக' என்று முற்பட்டு முகிலொடு செல்லா நின்றனன். 18. தேர்வரவு கூறல் (349. பாவியை) பொருள் வயின் பிரிந்த தலைவன் முகிலொடு வந்து புகா நிற்ப இம்முகில் தலைவியின் உயிரைச் செகுப்பான் உருநின்ற பொழுது அம்பலத்தான் அருள் போல (போய்த் தேடிய) பெரு நிதியோடு அன்ப ருடைய தேர் கதும்என வந்து சேர்ந்தது. அதல்ை வரக்கடவதனை வெல்லு மாறில்லையே போலும்!' என்று தலைவிக்குத், தோழி தேர் வரவு கூறினள். (தலைவன் பொருள்முடித்துக் கொண்டு விருப்பத்துடனிே வாரா நின்ருன் என்று தோழி இனிய வார்த்தையைச் சொன்ள்ை.)