பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க உ 2. திருக்கோவையார் உரைநடை என்று நியாயினும் கூறிற்றிலையே? வேறு கூறுவார் யாவர்? என்று விளக்கொடு வெறுத்துக் கூறினள். உனக்கு உணவாகிய நெய்யைப் பெற்று உண்ட செருக்கர் லும் உனக்குப் பகை ஆகிய இருளைக் கிழித்த மேம்பாட்டாலும் என்னை உதாசீனம் பண்ணிய்ை இத்தனை - என்றபடி. 6. வாரம் பகர்ந்து வாயில் மறுத்து உரைத்தல் (357. பூங்குவளை) விளக்கொடு வெறுத்து வருந்தி நின்ற தலைவி, தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்து வாயிற்கண் நிற்ப, வண்டோரனையர் ஆடவர், பூவோரனையர் மகளிர் ஆத லால் நாமும் அவன் தலை அளி பெற்றபொழுது ஏற்றுக் கொள்ளுவது அன்ருே நமக்குக் காரியம்; நாம் அவ ளுேடு புலக்கற்பாலேம் அல்லேம் என்று வாயினோ வித்தார்க்குத் தலைவரின் தோளையும் மாலையையும் தம் இல்லத்து வளைத்து வைத்து அவரை வேண்டினவர் கொள்வாராக. நான் தலைவரைப் பரத்தையர்க்கு உரு வரையாக (முற்றுரட்டாக) கொடுத்தேன் என்று தலைவி மறுத்துக் கூறினள். 7. பள்ளியிடத்து ஊடல் (358. தவஞ்செய்திலாத) வாயில் மறுத்த தலைவி ஆற்ருமையே வாயிலாகப் புக்குப் பள்ளியிடத்தாளுகிய தலைவைேடு, நின்னை இடை விடாது நுகர் தற்கு முற்காலத்துத் தவத்தைச் செய் யாத தீவினையேமை நோவாது, இன்று இவ்வாருகிய நின்னை நோவதென்ளுே? அது கிடக்க, நின் காதலிமார் புறமே கற்று உனக்குப் புதிதாகச் செய்த அப் புல்லுதலை யாம் செய்ய மாட்டேம். அதனுல் எம்மைத் தொடாதே; எம் கலையை விடுவாயாக’ என்று கலவி கருதிப் புலவா நின் ருள். இது பெருமை மிக்கி கற்பினை உடையாள் நாயக னுடனே வெறுத்து உரைத்தது. (பழைய உரை.) 4