பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை செம்மலரும், செம்பட்டும், செஞ்சாந்தும் நமது திருவை யுடைய மனேயின்கண் வந்து தோன்றின எனச் செவ்வணி கண்ட வரத்தை வாயிலவர் தம்முள் கூறினர். 361 H புனல் வரவு 3. தலைவியுடன் மனேவயின் தங்கி இன்புற்ற தலைவ னுடைய தோள்களைப் பரத்தையர் பொருந்தி மகிழப் புதுப் புனல் வந்து பரந்தது; இனிப் புனலாட்டில்ை இவன் (தலைவன்) பரத்தையரை மகிழ்வித்துத் தன் காதலியை வெகுள்விக்கும்போலும் எனக் கண்டவர் சொல்லினர். 369 4. புனல் வரவு கேட்ட கலவன் புனலாட்டு விழ விற்குப் பரத்தையர் சேரிக்கட் செல்லா கிற்ப, இவனேப் புணர்தற்கு முற்காலத்தே தவம் செய்திர்கள். தேர் வந்து தோன்றிற்று' என்று தேர்வரவு கண்டு பரத்தையர் மகிழ்ந்து கூறினர். 5. வான் அரமங்கையர் என்று சொல்லும் வண்ணம் மற்ருெருத்தி வந்து இவனேத் (தலைவனே) திரித்துக் கொள்ளக் கொடுத்துப் பின் வருந்தாது, முன்னுறக் காப் போம் என ஏனேய பரத்தையர் கூறினர். 371. 6. ஏனைய பரத்தையர் மாட்டு இவன் அருள் செல் லாமல் விலக்கேனயின் என் மாட்டு இவனே.த (தலைவனே) தக்து அழா கின்ற இவன் மனேக்கிழத்தி ஆகிய அப்பூங் கொடி (தலைவி) ஆகின்றேன் என்று பரத்தைத் தலைவி தன்னே வியந்து கூறினள். 7. பரத்தையர் தலைவி தன்னே வியந்து கூறிள்ை என் அ கேட்ட தலைவி எங்கைச்சியார் தமக்கும் ஒரு தங்கைச்சியார் தோன்றின பொழுதே தன் இறுமாப்பு ஒழியும் (என்னெங்கைக்கு)" என்று பரத்தையை நோக்கித் தலைவி நகைத்துக் கூறினள். 373 8. தலைவனேப் பரத்தையர் வசம் புனலாட ,விட்டுச் சூடுவாரின் றிச் செப்பின்கண் இட்டடைத்துத் தமியே