பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

ஊற்ருன வுண்ணு ரமுதே உடையானே. வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யர் ர்ை மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்ருடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று - சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்