பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

தார். அவர்தம் மனேவியாரும் தம் கன வரைத் தீண்டாது இல்லறக் கடமைகளை ஒழுங்காகச் செய்து வாழ்ந்தார். கணவன் மனேவி இருவரும் தமது பிணக் கினே அயலவர் அறியாதவாறு இல்லறக் கடமைகளை முறைப்படி செய்து சிவனடியார்களைப் பேணிப் போற்றினர்.

இவ்விருவரது உள்ளத்துறுதி உலகத்தார் அறிந்து போற்றுதல் வேண்டும் எனத் திருவுளங்கொண்ட சிவ பெருமான் சிவயோகியார் வடிவில் திருநீலகண்டரை யடைந்து தம் கையிலுள்ள திருவோடு ஒன்றனேக் கொடுத்துப் பாதுகாத்து வைக்கும்படி சொல்லிச் சென்றார் : சென்ற சிவயோ கியார் சிலநாட் கழித்து திருநீல கண்டக் குயவனரையடைந்து தாம் கொடுத்த ஒட்டினேத் தரும்படி கேட்டார். திருவோடு வைத்த இடத்திற் காணுமையால் செய்வதறியாது வருந்திய திருநீல கண்டக்குயவனுர் சிவயோ கியாரைப் பணிந்து வேறு புதியதொரு திருவோடு தருவதாகக் கூறினர். சிவ யோகியார் மிகவும் வெகுண்டு, நீர் நுமது மனைவியின் கையைப் பற்றி நீரிலே மூழ்கி நாங்கள் திருவே ட்டை எடுத்துக் கொள்ளவில்லை' என்று சத்தியஞ்செய்வீராக’ என்ருர். திருநீலகண்டநாயனரும் தமது மனேவியுடன் தில்லையில் திருப்புலிச்சரத் திருக்கோயிலின் எதிரிலுள்ள திருக்குளத்தையடைந்து ஒரு கோலைப் பற்றிக்கொண்டு முழுகப் புக்கனர். அந்நிலையிற் சிவயோ கியார் , மனேவி யின் கையைப் பற்றிக்கொண்டு நீரில் மூழ்குவீராக’ என வற்புறுத்தினர்; நாயனர் அவ்வாறு செய்தற்குத் தடையாகத் தங்களிடையேயுள்ள சபதத்தை அங்குள் ளார் கேட்ப எடுத்துச் சொல்லித் தம் மனேவியாருடன் குளத்தில் மூழ்கினர். மூழ்கி எழும் நிலையில் அவ்விரு வரும் முதுமை நீங்கி இளமை பெற்றுத் தோன்றிஞர்கள்: சிவயோகியராக வந்த இறைவர் மறைந்து அம்மையப்ப ராக விடைமேல் தோன்றி அருள்புரிந்து மறைந்தருளினர்.