பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

உதிரம் பெருகி யொழுகும்படி செய்தார். நண்பகவில் பூசைக்கு வந்த திண்ணனர் அதனேக் கண்டு வருந்திப் பச்சிலைகளாகிய நன்மருந்தினேத் தேடிக் கொணர்ந்து பிழிந்தும் உதிரம் நிற்கவில்லை. அந்நிலையில் உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் என்னும் பழமொழி நினைவுக்கு வந்தமையால் தமது வலக்கண்ணை அம் பினல் தோண்டியெடுத்துக் காளத்தியப்பரது வலத் கண்ணில் அப்பினர். குருதியொழுகுதல் நின்றது. எனி ஆணும் இறைவரது இடக்கண்ணில் குருதியொழுகத் தொடங் கியது. மருந்து கைகண்ட திண்ணனர் தமது இடக் கண்ணே யும் தோண்ட முற்பட்டார். அந்நிலையில் காளத்தி யிறைவர் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறித் தம் திருக்கையில்ை திண்ணனர் கையைப் பிடித்துக்கொண்டு, “மாறிலாப் பேரன்பனே, என் வலப்பக்கத்தில் நிற்பா அய் எசு எனத் திருவாய் மலர்ந்து கண்ணப்ப நாயனர்க்குப் பேரருள் புரிந்து பேரானந்தப் பெருவாழ்வை நல்கி அயருளிஞர் .

2ே) குங்குலியக் கலய காயஞர்

திருக்கடவூரில் மறையவர் குலத்தில் தோன்றிய இவர், திருக்கடவூர் வீரட்டத்தில் நாள்தேள்றும் குங்குலியத்துTபம் இடும் பணியினைத் தவருது செய்து வந்தார். வறுமை நிலை வரவே மனைவிமக்கள் பசி யினல் வருத்தமுற்றனர். மனைவியார் நெல் வாங்குதற் கெனத் தம்பால் கழற்றித் தந்த திருமங்கலியத்தைக்கொண்டு செல்லும் கலயனர் அத்திருமங்கலியத்தை விற்று எதிரே வந்த குங்குலியத்தை வாங்கித் திருக்கோயிலுக்குச் சென்று குங்குலியத்தொண்டு புரி வாரா யி னர். அந்நிலையில் கடவூரிறைவன் திருவருளால் இவரில்லத்தில் வேண்டும் பொருள்கள் வந்து நிரம்பின. வறுமை நீங்கப்பெற்ற குங்குலியக்கலயனர் திருப்பனந்தாளில் தாடகை என்னும் பெயருடைய அம்மையின் வழிபாட்டிற்கெனச் சாய்ந் திருந்த சிவலிங்கத்தைத் தம் கழுத்திற் கயிற்றற்