பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2?

மலர்கள் பூத்த தடாகத்திலே கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றித் திருவைந்தெழுத்தையும் திருவுருத்திரத்தையும் இரவும் பகலும் வழுவாமல் செபித்து வழிபடுதலைத் தமது வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தகைய மந்திர வழிபாட்டின் பயனுகச் சிவபெருமான் திருவருளுக்கு உரியராய்ச் சிவலோகத்தையடைந்து பேரின்பம் பெற்ருர்.

(89) திருகாளைப்போவார் நாயஞர்

நந்தனர் என்னும் பெயருடைய இந்நாயனர் மேற்கா நாட்டில் கொள்ளிடத்தின் கரையிலுள்ள ஆதனூரில் ஆதி திராவிடர் குலத்திலே தோன்றியவர். அவ்வூரில் தமக்கு மானியமாக விடப்பட்ட பறைத்துடைவையாகிய நிலத்தின் விளைவையே தமக்குரிய உணவுரிமையாகக் கொண்டு தமது தொழில் முயற்சியால் சிவாலயங்கள் தோறும் பேரிகை முதலிய தோற்கருவிகளுக்குரிய தோலும் வாரும் வீணைக்கும் யாழுக்கும் நரம்பும் அர்ச்சனேக்குக் கோரோசனையும் கொடுத்து வந்தார். திருக்கோயிலின் புறவாயிலில் நின்று அன்பின் மேலீட்டினுல் சிவனைப் போற்றி இசையுடன் பாடுவதனை மரபாகக் கொண்டிருந் தார். ஒருநாள் திருப்புன்கூர்ச் சிவலோகநாதர் கோயில் வாயிலில் நின்று இவர் இறைவனை இசையுடன் பாடிய போது இறைவன் நந்தியை விலகச் செய்து நேரே காட்சி கொடுத்தருளிஞர். திருப்புன்கூரில் சிவலிங்கப் பெருமானே நேரிற்கண்டு கும்பிட்ட நந்தனர் அவ்வூரிற் குளம் ஒன்று தோண்டினர். தில்லையைக் காண விரும்பி நாளைப் போவேன் நாளைப் போவேன் என்று ஆர்வமுடன் சொல்லி வந்த நந்தனர் ஒருநாள் தில்லையை யடைந்து வலம் வந்தார். தில்லையிற் கூத்தப்பெருமான் பணித்த வண்ணம் தில்லைவாழந்தணர் செய்த வேள்வித் தீயில் மூழ்கி மெய்யில் வெண்ணுரல் விளங்க வேணி முடிகொண்டு வெளிப்பட்ட திருநாளைப் போவாராம் மறைமுனிவர் தில்லைவாழந்தனர் உடன்வரத் திருக்கோயிற்