பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமுது செய்தருள வேண்டிக்கொண்டார். மூத்த திருநாவுக் கரசு என்ற அப்பூதியார் மைந்தன் அடியார்க்கு அமுது படைக்க வாழையிலை அரியச் சென்றவன் தன் தினப் பாம்பு தீண்டிய நிலையிலும் அதனை உதறி விரைந்து ஓடி வந்து வாழையிலையைத் தாயிடம் 551 விட வேகத்தால் கீழே வீழ்ந்து உயிர் நீத்தான். அடியார் அமுது செய்தருளவேண்டுமே என்ற ஆர்வத்தால் இறந்த மைந்தனைப் பாயில் சுருட்டி ஒரு பக்கம் மறைத்து வைத்துவிட்டுத் திருநாவுக்கரசரைப் பணிந்து திருவமுது செய்ய அழைத்தனர். தம்மை வணங்கிய எல்லோர்க் கும் திருநீறு அளித்த திருநாவுக்கரசர் உள்ளத்தே தடு மாற்றம் தோன்ற மூத்த மைந்தன் எங்கே’ என வினவினர். அது கேட்ட அப்பூதியார் அவன் இங்கு இப் போது உதவான் என்ருர். அவன் எங்கே, உண்மையைச் சொல்லும் என நாவுக்கரசர் கேட்க , அப்பூதியார் நடுக்க முற்று நடந்ததைக் கூறினர். உடனே திருநாவுக்கரசர் மூத்த திருநாவுக்கரசின் உடம்பினைக் கொணரச்செய்து 'ஒன்றுகொலாம் என்னும் திருப்பதிகம் பாடி விடந்தீர்த். தருளினர். உயிர் பெற்றெழுந்த மூத்த திருநாவுக்கரசு திருநாவுக்கரசு நாயனர் திருவடிகளில் வீழ்ந்து வ ைங் கினன். பின்பு அப்பூதியா ரொடும் அவர்தம் மக்களோடும் திருநாவுக்கரசர் உடனமர்ந்து திருவமுது செய்தருளினர். திருப்பழனப்பெருமானேப் பரவிப் போற்றிய திருப் பதிகத்தில் 'அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய்” எனத் திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் சிவபத்தியினைச் சிறப் பித்துள்ளார். இவ்வாறு திருநாவுக்கரசர் திருவடிகளேயே தமக்குரிய சார்பாகக் கொண்டு வாழ்ந்த அப்பூதியடிகளார் தில்லைமன்றுள் ஆடும் திருவடிகளை யடைந்து இன்புற்ருர்