பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

会5°

மானைப் பரவிப் போற்றி ஆண்பனைகள் பெண்பன களாகக் காய்க்கும்படி செய்தருளினர். காரைக்காலம்மை யார் தலையாலே நடந்த பதியாகிய திருவலாங்காட்டினே மிதிக்க அஞ்சி அதன் அருகேயுள்ள 2èm fi do துயில் கொண்டார். அந்நிலையில் ஆலங்காட்டடிகள் கனவில் தோன்றி நம்மைப் பாடுதற்கு மறந்தனையோ என வினவியருளத் துஞ்ச வருவாரும் என்ற பதிகத்தைப் பாடிப் போற்றினர். திருக்காளத்தியை யடைந்து காளத்தி யிறைவரையும் அருகே நின்ற கண்ணப்ப நாயனரையும் வழிபட்டுத் திருவொற்றியூரை யடைந்தார்.

மயிலாப்பூரில் வணிகர் குலத்திற் பிறந்த சிவநேசர் என்பார் திருஞானசம்பந்தர் பாண்டி நாட்டில் சமணரை வாதில் வென்று திருநீறு பரப்பிய திறத்தை அறிந்தார் வாயிலாகக் கேட்டு, காழிநாடுடைய சம்பந்தர்க்கு அடி யேன். யான் பெற்ற பூம்பாவையையும் ஈட்டிய பெருஞ் செல்வத்தையும் அவர்க்கே உடைமையாகக் கொடுத் தேன்’ என மொழிந்தார். தன் மகள் பூம்பாவை மலர் கொய்யும் நிலையில் அரவு தீண்டியிறந்தாள். அவளது உடம்பைத் தகனஞ்செய்து எலும்பினை ஒரு குடத்தில் இட்டுக் கன்னிமாடத்தில் வைத்துப் பூசித்து வந்தார். திருவொற்றியூரில் திருஞானசம்பந்தர் எழுந்தருளிய நிலை .யில் அவரைத் திருமயிலேக்கு அழைத்து வந்து தமது குறையைத் தெரிவித்துக்கொண்டார். திருமயிலாப்பூரைத் யடைந்த திருஞானசம்பந்தர் இறைவரை வழிபட்டுப் புறத்தே போந்து சிவநேசரை நோக்கி அவர் மகளது என்பினைச் சேமித்துவைத்த குடத்தினை கோயில் வா யிலிற் கொணரச் செய்தார். இறைவனது திருவருளை நினைந்து மக்கள் அடைதற்குரிய பெரும்பயன் சிவனடியார்களை அமுது செய்வித்தலும் இறைவனது திருவிழாப் பொலிவு கண்டு மகிழ்தலுமே என்பது உண்மையானல் பூம்பாவாய்