பக்கம்:திருத்தொண்டர் வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

நீ உலகர் முன் உயிர் பெற்று வருவாயாக’ என் மட்டிட்ட புன்னையங்கானல் என்ற திருப்பதிகத்தைப் பாடியருளி ஞர். அந்நிலையில் செந்தாமரை மலர் விரிய அதனுள் இருந்து தோன்றும் திருமகள் போன்று குடம் உடையக் குவித்த செங்கையினளாய் உயிர் பெற்றுத் தோன்றிள்ை. சிவபெருமானே யிறைஞ்சி திருஞ்ானசம்பந்தரை வணங்கி நின்ருள். புண்ணியப் பதிருைண்டு நிரம்பிய ஞான சம்பந்தரை நோக்கிப் பூம்பாவையைத் திருமண் ஞ்செய்து கொள்ளும்படி சிவநேசர் வேண்டிக்கொண்டார். 'நீவிர் பெற்ற பெண் விடத்தில்ை இறந்த பின்பு இறைவன் திருவருளால் யாம் பூம்பாவையை மீண்டும் பிறப்பித் தோம். ஆதலால் இவள் என் மகளே என்று மறுத்தருளி ர்ை. பூம்பாவையும் சிவனருளேச் சிந்தித்திருந்து சிவத்தை மேவிள்ை.

திருஞானசமபந்தர் மயில்ப் பெருமான வழி பட்டுப் பல தலங்களைப் பணிந்து பாடிச் சீகாழிப்பதியை யடைந்தார். அவரை வணங்கும் விருப்புடன் முருக நாயனுர் , திருநீலநக்கர் சுற்றத்தாருடன் சீகாழிப்பதியை அடைந்தனர். சிவபாதவிருதயரும் சுற்றத்தாரும் திரு. ஞா ன சம்பந்த ரை த் திருமணஞ்செய்துகொள்ளுதல் வேண்டும் என வற்புறுத்தி உடன்படச் செய்தார்கள். திருநல்லூரில் வாழும் நம்பாண்டார் நம்பி மகளாரை மகட்பேசி முடித்தார்கள்; திருமண நாளில் திருஞான சம்பந்தர் திருமணக்கோ லத்துடன் திருநல்லூர்க்கெழுந் தருளினர். நம்பாண்டார் நம்பி தம் மனைவியாருடன் திருஞானசம்பந்தர் திருவடிகளைத் துய நீரால் விளக்கி, 'யான் பெற்ற மகளே ஆளுடைய பிள்ளையார்க்கு அளித் தேன்’ என நீர் வார்த்துக் கொடுத்தார். திருநீலநக்க நாயனர் திருமணச் சடங்கினே வேத விதிப்படி நிகழ்த் திஞர். திருஞானசம்பந்தர் வெண் பொரியினைத் துரவித்