பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



மேலே, அமர்ந்து பொருந்தி, ஒப்பற்ற திருத்தணிகை என்னும் திருப்பதியின்கண், நிலைபெற்ற முருகப் பெருமானே திருப்புகழ் என்னும் நூலினைப் படிக்கும் அன்புடன் படிக்கின்ற அவர்கள், உன் அருளன்பால் தங்கட்கு உண்டாகும் மனபலத்தினால், ஒருவரையும் மதிக்க மாட்டார்கள். .

படிப்போர் எனற்பாலது படிக்குமவர் என்று சுட்டொடு மருவியது வலியுறுத்தற்கு என்க. ஒருத்தர் ஒன்று + அத்து : அர் எனப் பிரியும் ஒன்று என்பது 'ஒரு' என ஆயிற்று ஒன்று

அருர் தந்து என்ணி புகவரி என்ற விதிப்படி ஒன்' என நின்று.

"துதவி ரென்ன னெறு ரகரர் ஆகும் உகரம் உருதவி ஆவ4ண” என்ற தொல்காப்பியர் நூற்பாபடி ஒரு என நின்றது. இடை நின்ற அத்துச்சாரியையின் அகரங் கெட்டது. அர் பலர்பால் விகுதி: 'அர் என்னும் பலர்பால் விகுதி உயர்வு பற்றி வந்தது. போலும் - பிற காரணங்களால் உயர்வு பற்றிய ஒருத்தரை என்க. பிற கரணங்களாவன கல்வி, செல்வம், வீரம், இளமை, அழகு, திடம், வன்மை, ஈகை முதலியன. மதிப்பதிலை என்றது பொருட்படுத்துவது இல்லை என்பதாம்.

கல்வி முதலியவற்றாற் சிறந்த எவரையும் மதியாததற்குக் காரணம், உனதருளும், நின் திருப்புகழ் படித்து மனத்து அறிவு பெருகிய திடத்தாலும் என்க.

"நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்" என்னும் திருநாவுக்கரசர் திருவாக்குக் கருதத் தக்கது.