பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



குண்டலங்களிற் சென்று தாக்கி, கூத்துடன், பஞ்சேந்திரியங்களும் சஞ்சலம் அடையும்படி போர் செய்து நீங்காத துன்பத்தையும் கொடுமைகளையும் எப்பொழுதும் உண்டாக்கி, சங்குபோலும் வெண்மையை உடைய விஷம் தங்குகின்ற கடைக்கண்களைக் கொண்டுள்ள மாதர்களிடத்தில், விளங்கும் பல செம்பொன்னைக் கொடுத்துக் கொடுத்து, இன்பத்தை அடைகின்ற, மனம், வாய், மெய் என்னும் முக்கரணங்களும், கந்தக் கடவுளே தேவரீரின் செம்மையைத் தரும் திருப்பாத மலர்களை அடையும் விதத்தை, மாலையிலும் காலைவேளைகளிலும் உலக சங்கடம் நீங்கி, நின் பத்தியிலேயே பொருந்தி இருப்பேனோ?

புணரி - கடல் தரையோடு சம்பந்தப்பட்டிருப்பது என்பது பொருள் அநங்கன் - மன்மதன் இது ந அங்கன் என்னும் வடமொழி: தேகம் இல்லாதவன் என்பது பொருள் உருவிலி, மெய்யிலான் என்பன தமிழ் அநங்கன் அன்பு ஈண்டு நீலோற்பலத்தைக் குறித்தது. அவன் மலர்ப்பாணங்களில் நீலோற்பலமே மிக்க கொடுமை உடையது ஆதல்பற்றி, கயல் - கெண்டைமீனின் வகைப் பேதம். கடல், குவளை, வண்டு, கருங்கயல், கெண்டை, யமன், தாமரை, சகோரம், நஞ்சு, வேல் இவையனைத்தும் கண்ணுக்குவமைப் பொருள்கள், கண்ணாற் காமுகரைப் படுக்கும் காரிகையார்க்குச் செம்பொன் தந்து தந்து இன்படையும் என் முக்கரணமும் நின் திருவடி சேர்த்துவனோ, சேர்த்தாவிடின் நீ சேர்த்துமாறு அருள் புரிய வேண்டும் என்பதாம். - -

செம் பொன் தந்து தந்து மிகுதிப் பொருளில் அடுக்கியது. தோளில் மார்பில் தொங்குவதாதலின் மலர் மாலைக்குத் தொங்கல்' எனப் பெயராயிற்று. அசலம் பசுஞ்சந்தனம் - பொதியமலையில் விளையும் சந்தனம் சிறப்புடையதென்பர் பொதியமலைக்கும் இதனானே சந்தனவெற்பு என்னும் பெயர்