பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

135



'விந்தை விட்டையோ நொந்து கெட்டையோ" என்னும் முதுமொழியுங் காண்க. -

ஆறு குழந்தை வடிவா யிருந்து பின் ஒன்றாக உமாதேவியார் தழுவி எடுத்தபோழ்து கூடி விளங்கினவர் ஆதலின் ஒன்று சேர்த்துக் கூட்டப் பெற்றவர் என்ற பொருளிற் “கந்தன்' என்னும் திருநாமம் ஏற்பட்டது. தந்தைக்குப் பின் வலியுடன் நின்று குடியைத் தாங்குபவன் ஆதலின் புத்திரனை மைந்தன்' என்றார். மைந்து வலிமை. கன்றா முகுந்தன் துன்ப மில்லாத் திருமால் கொத்து என்பது கொந்து என்றாயது மெலித்தல் விகாரம்,