பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



குறவர் மகளாகிய வள்ளிநாயகியாரோடு இரண்டு பேரையும் சேர்கின்ற கூடல்வகை புரியும் நாயகனே! பலம் மிகுந்த அசுரர்களுடைய கூட்டம் முழுவதும் அழியவும் உயர்ந்த தேவர்களின் சிறையை நீக்கவும், அழகு மிகுந்த, சூரியனின் கிரணங்களைப் போல ஒளிரும் வேலாயுதத்தை விடுகின்ற, சர்வணப் பொய்கையில் உற்பவித்து அடியார் வினையை அரிக்கும் ஆசையை மிகவும் உடையவரே கூட்டமான விண்மீன்களுக்கெல்லாம் தலைவனாக நிலவினையும் கொன்றை மாலையையும் அணிந்த சடாபாரத்தை உடைய சிவபெருமானும், கங்கா நதியும் அழகு மிகுந்த பழமையான உமாதேவியாரும் பெற்றருளிய மழலைச் சொற்களைப் பேசுங் குழந்தையே பழநி மலையில் எழுந்தருளி இருக்கும் பெருமானே.

கனி இளக்க முடையது என்ற காரணம் பற்றி வந்த பெயர். கரிணி - பெண்யானை, ஈண்டுப் பொதுவாக யானையைக் குறித்தது. மரகத மயில் - பச்சை நிறம் பொருந்திய மயில் படலம் - கூட்டம், பழம் பொருளாகிய ஆதிக்குச் சத்தியாக அவன் என்றோ அன்றே இவளும் உள்ளவளாதலின் உமையை பழம் நிமலை என்றார். களங்கமற்ற ஞானத்தை உடையவள் என்ற பொருளில் நிமலை எனுஞ் சொல் வந்தது. நிமலம் - அகத் தூய்மை அமலம் - புறத் தூய்மை தந்தைக்குப் பின் குடியைத் தூண்போல் நின்று காப்பவன் ஆதலின் புத்திரனுக்கு மதலை எனும் பெயர் வந்தது. பசுபதி - ஆன்மாக்களுக்கு எல்லாம் இறைவனாக இருப்பவன்' என்பது பொருள்.

இந்தப் பாட்டு முருகர் பெருமை கூறி அழைத்த தலம்.

42.தனனத் தனதன தனதன தந்தத் தனனத் தனதன தனதன தந்தத் தனனத் தனதன தனதன தந்தத் - தனதான்