பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி. லிட்

19



அடிபேணி, இஃது ஒருமைப்பன்மை மயக்கம்: 'திருவடிகளைத் துதித்து என்றாயிற்று இனி திருவடியைத் துதித்து எனவும் ஒருமையாற் பொருளுரைப்பர் நடக்க நடிக்க வலத்தாளை ஊன்றி இடத்தாளை எடுக்கப்பெறுதலின் இடத்தாள் அருள்புரி தாள் என்பர். இதுபற்றி

"எடுத்த தான்ின் அருர் வங்க

இருமுனிவர் பனந்து பேத்ர" என்றார் பெரியாரும் திருவடி ஒன்றையே குறிப்பின் அருள்புரி தாளாகிய இத்தாளை என்க. இனி இருதாளையுங் குறிப்பின் திரோபவ அனுக்கிரகஞ் செய்யும் வலத்தாளையும், திருவருள் அனுக்கிரகஞ் செய்யும் இடத்தாளையும் எனக் கொள்க. 'கிரியை, ஞானம்' எனும் இரண்டும் இறைவனுக்கு இரு தாள்களாம். ஆதலின் கிரியாசக்தி. ஞானசக்திகளை வணங்கி என்பாரும் உண்டு. இங்கும் ஒருமையாற் கூறின் ஞான சத்தியை அல்லது ஞான பாதத்தை வணங்கி என்க.

'கற்றிடும் அடியவர்' என்றது பதிநூல் கற்று ஞானம் பெற்றுள்ள அடியவர்களை,

"கற்றவர் உள்ளத்து இறைவன் விருப்பொடு இருப்பன்' என்பது வேதம்.

கற்றவர் விழுங்குக் கற்பகக் கனி என்றும்

'கல்லார் நெஞ்சில் நில்வான் ஈசன் என்றும் பெரியார் கூறினவை ஈண்டு ஒப்பிடத்தக்கன.

வேண்டுவேர் வேண்டுவதே ஈவான் கண்டாப் என்ற தேவாரச் செய்யுட்படி அடியார் வேண்டுவனவற்றையே இறைவன் தந்தருள் செய்பவன். ஆதலின் கற்பக என்றார். 'கற்பகம் என்பது வடசொல்' என்பர். தன்னை அடைந்து