பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«»

த கோவேந்தன், டி லிட் •్య• 45

மணமோடு கூடிய சோலைகளிலே சஞ்சரிப்பதாகிய, தென்றற் காற்றும், குளிர்ச்சி பொருந்திய விசாலமாகிய அழகிய சுனைகளிலே. நெருங்கி வர, பிரிவினையுடைய இரவிலும் பகலிலும் மாலைப்பொழுதிலும், காமத்தை மிகுக்கவே நிற்கும் குயில், வந்து தனது இசையை தந்தன என்று சொல்ல, இருவிழிகளும், நித்திரை செய்வதில்லாமலும், காம மயக்கத்தைக் கொண்டு என்னுடைய மனது பதைபதைப்படைய இத்தேகத்தைப் பெற்று வருந்துகின்ற கபடம் மிகுந்த செயலை உடையவனாகிய நான், இனிமேல் கடவுளே உம்முடைய, தாமரைப் பூவைப் போல் மலர்ந்து விளங்குகின்ற, திருவடிகளைப் பெற்றிடுவேனோ?

சருவுதல் - அணைத்தல்; மலர்க்கணை எய்ய மதனன் அணைந்தனன், என்பாருமுளர் 'அம்புலியும், தென்றலும் என்றவற்றின் உம்மைகள் எண் உம்மைகள், காமிகளை மதன், அம்புலி, தென்றல், குயில், இரவு முதலியன துன்பு செயும் என்பர்.

வணிபொன்று பயிரண்டு மரணமூன்று நானும்ே

மதி ஆந்த கங்குக/து மரனேழு 2/டைட்ெடு ஆரமொன் தன்றின்த் தடங்களும் இறுக்குமாள்

ஆத்தனைக் கெ/மியக் கென்ன7வியொன்று காணுரே"

என்ற தனிப்பாடல் அடிகள் நோக்கத் தக்கன.

"சயிலம் தென்றல்' என்ற குறிப்பால் பொதியத்தைக் குறித்தது. அண்டர் திருமாலின் அருளுக்கு அண்மையானவர் என்பது பொருள். பத்தவதாரத்தால் புவியில் அவதரித்து. உலகைப் போற்றியதால் "எண்டிசை திகழும் புகழ் கொண்டவன்" என்று திருமாலைக் கூறினார். கச்சிக்கணிகண்ணர் என்பார் பாடலைக் கேட்டு அவரைப் பின்றொடர்ந்து சென்றதால் வண்டமிழ் பயில்வோர்பின் திரிகின்றவன் என்றார். இதனை,

சுருட்டு உணத்தோ ருெத்தண ப்