பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன், டி லிட் భీ• - S7

திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமானே மணமுடைய, அழகிய பூக்கொத்தின் மேலே தெந்தனந் தெந்ததென என்னும் இசையோடு, தேனிக் கூட்டங்கள் தேனின் மணத்தைக் கொண்டு தொடர்கின்ற, கூந்தலையுடைய பெண்களின், நெருங்கியுள்ள கோவைக் கனிபோலும் இதழ் அமிழ்தத்தை உண்டு, காதல் பரவ இரவிக்கையை அணிந்துள்ள யானைத் தலையை ஒத்த, பாரமாகிய கொங்கைகளைச் சுமந்தொளிரும் மார்பிலே, படியவும், கணையை ஒத்த கண்கள் சோர, உடல் உருக, உந்தியாகிய மடுவில் விழுகின்றவனாகிய அடியேனை, தேவரீருடைய, திருவடிச் சிலம்புகளையும். பொன்னாற் செய்துள்ள தண்டைகளையும், கிண்கிணி என்கிற காலணியையும் பிரகாசத்தோடு விளங்கும் கடப்பமாலையும், அழகுற அணிந்து கொள்ளும் கந்தக் கடவுளே உமது அழகிய பாதங்களிற் சேர்த்தருள் செய்வாயாக

மன்றல் அம் கொந்து, மணமும் அழகையும் கொண்டுள்ள பூங்கொத்து கொத்து என்பது கொந்து என்றானது மெலித்தல் விகாரம் இது சந்த நோக்கி வந்தது. வண்டினம் - வண்டின் வகை எனினும் ஆம். கும்ப கணதன மார்பு குடத்தை ஒத்த கொங்கை என்பாரும் உண்டு. உந்தி என்கின்ற மடு - தேர்த்தட்டை ஒத்த அல்குற்தடம் என்பாரும் உண்டு.

நாராயணன் வராகாவதாரத்தில் செருக்குண்டு இருந்ததாகவும், அவர் செருக்கை அடக்கி அவர் பல்லாகிய கொம்பைப் பிடுங்கி மார்பில் அணிந்து கொண்டதாகவும் தொன்மம் கூறும்.

அவ்வாறே நாராயணன் கூர்மாவதாரத்தில் செருக்குற்ற காலத்து அவரைக் கொன்று அவர் ஒட்டைத் தான்் ஈறில்லான்