பக்கம்:திருப்புமுனை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


பெறணும். இனியனை எந்தப் பரிசும் வாங்க விடக்கூடாது, எல்லாம் நாமேதான் வாங்கணும்.” தன் ஆசையை வீராப்பாக வெளிப்படுத்தினான் தங்கதுரை. பெருமித உணர்வு பொங்க மற்றவர்களின் முகத்தை ஏறிட்டு நோக்கினான்.

தங்கதுரை கூறியதை ஆமோதிப்பவன் போல் மணி தலையை ஆட்டியபடி பேசினான்:

“நல்ல யோசனைதான். ஆனால், அதுக்கு ரொம்ப அறிவும் திறமையும் வேணுமே. அதுக்கு நாம எங்கேடா போறது!”

இவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அருளுக்கு இதைக் கேட்டபோது சிரிப்பு வந்துவிட்டது. கேலி செய்யும் பாவனையில்,

“அறிவும் திறமையும் எங்கேயாவது கடையில் விற்குமா என்று தேடிப் பார்த்து வாங்கினா போச்சு!” என்று வேண்டுமென்றே கிண்டல் செய்தான் அருள்.

இதைக் கேட்டபோது கண்ணாயிரத்துக்கு ‘சுரீர்’ என்றது. வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு வன்ம உணர்ச்சியோடு பேசினான்:

“நம்மாலே பரிசு வாங்க முடியாவிட்டாலும் அவனை வாங்கவிடாமல் தடுத்திட்டா அதுவே நமக்கு வெற்றிதாண்டா.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/14&oldid=489709" இலிருந்து மீள்விக்கப்பட்டது