பக்கம்:திருப்புமுனை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22


“என்னடா கண்ணா, கையிலேயும் முகத் திலேயும் பிளாஸ்திரி போட்டிருக்கே. உதடு வேறே வீங்கியிருக்கு. யார் கூடவாவது சண்டை போட்டியா?”

அக்கரையும் அனுதாபமும் பின்னிப் பிணைய கண்ணாயிரம் கேட்ட கேள்வி கண்ணன் மனதுக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. கண்ணாயிரத்தை ஒரு முறை வாஞ்சையோடு பார்த்தான். தான் சொல்லப் போகும் பதிலை ஆவல் பொங்க எதிர்நோக்கிக் காத்திருக்கும் தன் நண்பர்களை ஒருமுறை நோட்டமிட்டான். ஒரு கனைப்புக் கனைத்துத் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டு பேசினான்:

“என் கிட்ட யார்’டா சண்டைபோடமுடியும்? எங்கப்பா...... ” கண்ணன் முடிப்பதற்கு முன் தன் அனுமானத்தை வெளிப்படுத்த முனைந்தான் மணி. கண்ணாயிரத்தைப் போலவே அவனும் கண்ணனோடு நெருங்கிப் பழகியவன் ஆதலால் இடைமறித்துப் பேசினான்:

“அப்போ சரி, வழக்கமா நடக்கிற அப்பா பூஜை! இன்னிக்குக் கொஞ்சம் உக்கிரமா நடந்திருக்கும் போல இருக்கு இல்லேடா கண்ணா!”

மணியின் இடைமறிப்புக் கேள்வியில் இருந்த கேலியும் கிண்டலும் கண்ணனின் ஆத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருப்புமுனை.pdf/24&oldid=489773" இலிருந்து மீள்விக்கப்பட்டது