பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


கூடத்திலிருந்த 'அலாரம் டைம்பீஸ்' துடித்த துடிப்பு அவருக்குக் கேட்டது.

அவள் துடித்த துடிப்பும் அவருக்குக் கேட்டது.

அவளை அவர் விழி நிமிர்த்தி நோக்கினார். அவள் இதழ்கள் வண்டின் ஸ்பரிசம் பட்டதுபோலச் சிலிர்த்ததை அவர் உணர்ந்தார்.

மணி பன்னிரண்டு; கச்சிதம்.

"வாணியை இன்னும் காணோமே ? என்று எண்ணமிட்டார். அது சமயம், "என் நெஞ்சை உங்களுக்கு வெகு விரைவில் திறந்து காட்டுவதாக முன்பொரு சமயம் சொன்னேனல்லவா, அதற்காகவேதான் இப்பொழுது என் ஆண்டவனை நாடி வந்திருக்கிறேன், அனாதையாக!... ஆனால் இனியும் என்னை அனாதையாக விடமாட்டார் என் ஆண்டவன்!" என்று உறுதியின் பக்கபலத்தோடு பேசிய அவள் நேரில் நின்று, நினைவில் ஊடுருவி, நெஞ்சில் பிரதிபலிப்பதை யூகித்தார். 'என் நெஞ்சைத் திறந்து என்று தொடர்பற்ற நிலையுடன் வார்த்தைகளை அடுக்கினார். கேஸில் இருக்கும் எழுத்துக்களை வகைமாறி 'ஸ்டிக்கில்' அடுக்கப் பிரயத்தனப் படுகிற புதிய 'கம்பாஸிட்டர்' போல, அடுக்கியதை வாசித்துப் பார்த்ததும் மெல்லிளஞ் சிரிப்பைத் தனக்குத்தானே கொட்டி வெட்கப்படுகிறது போன்று அவரும் சிரித்து விட்டு அப்பால் வெட்கப்பட்டார். 'அந்த வெட்கம் நியாயமாகத் தவசீலியின் சார்பில் அல்லவா தோன்றியிருக்க வேண்டும்?' வார்த்தைகள் தறிகெட்டுப் புறப் பட்டால், பொருள்களும் விபரீதமாகத்தானே ஒலிக்கின்றன: ஆமாம்; என்னவோ ஆண்டவன் அப்படி இப்படி என்றெல்லாம் இந்தக் குமரிப் பெண் ஏதோ