பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 112



"ஆகட்டும் ஸார். இன்னும் கொஞ்ச நாழிகைப் பொழுதுக்கு மட்டும் நீங்கள் இந்த அபலையின் நிமித்தம் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் : ஸார், ஆசிரியர் ஸார்! நான் அனாதையாக இப்போது உங்கள் முன்னே குந்தியிருக்கிறேன். அருவமான ஆண்டவனை நான் இதுவரை கண்டதில்லை. ஆனால் இதோ உருவமான வடிவத்துடன் என ஆண்டவனை நான் தரிசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த ஆண்டவன் எனக்கு வைத்த சோதனைகளுக்கெல்லாம் விடிமோட்சம் காட்டப் போகிற இந்த ஆண்டவனைத்தான் நான் இக்கணத்தில் முழுக்க முழுக்க நம்பியிருக்கிறேன். அதாவது, என் வாழ்வையும் தாழ்வையும், என் உயிரையும், உடலையும் உங்களுடைய அன்புக் கரங்களிலே ஒப்படைத்து அடைக்கலம் புகவே நான் வந்திருக்கிறேன்!"

நீர் மட்டத்தில் தளும்பி நிற்கும் தாமரை மொட்டினின்றும் நீரலைகளின் பெருக்கத்தின் காரணமாகப் பட்டுத் தெறிக்கும் நீர் முத்துக்களுக்குச் சமதையாகத் தவசீலியின் நேத்திரங்கள் சுடுநீர் உகுத்தன.

"உயர்நிலை'யில் கருங்கல் துண்டு பட்டுவிட்டாற் போல் ஞானசீலன் துடிதுடித்துப் போனார். உள்ளத்தின் உள்ளம் ஆட, உள்ளத்தின் துடிப்பு ஆடியது. கண்ணின் மணிப் பார்வை நடுங்கியது. 'மெய்' விதிர்த்தது. ஆம்; மெய்' விதிர்த்தது! அவரது இதயம் அழுதது; ஆனால், எங்கோ தொலை தூரத்திலிருந்து தொல்வினை நமட்டுச் சிரிப்பு ஒன்றை நையாண்டிப் பான்மையுடன் வெளியிட்டுக் கொண்டிருந்தது மட்டும் அவருக்குத் துல்லியமாகக் கேட்டது. "தவ.சீலி! நீங்கள் ஆண்டவனைச் சந்தித்ததாகச் சற்றுமுன் கூறினர்கள். ஆனால் நானோ விதியைச்