பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


சந்தித்திருக்கிறேன். காதல், தியாகம், ஆண்டவன் என்று ஏதேதோ கேட்டு என்னைக் குழப்பியதற்குரிய காரணம் இப்பொழுதுதான் எனக்குப பிடிபடுகிறது. என் வாணி உங்கட்குத் தோழி என்று சிலாகித்துப் பேசினர்களே! அவளை நான் மணம் புரிந்து கொள்ள நாள் குறித்துள்ள உண்மையை வாணி உங்களிடம் அறிவிக்கவில்லையா? இதோ பாருங்கள், எங்கள் கல்யாண முகூர்த்தப் பத்திரிகையின் பிரதியை!"

விரிந்தது, வதுவை மடலின் கையெழுத்து நகல்.

"சிரஞ்சீவி ஞானசீலனுக்கு செளபாக்கியவதி வாணியை..!"

தவசீலி வாய்விட்டுப் படித்தாள். இமை வரம்புகளை விரல் நகம் கொண்டு துடைத்தாள். நிமிர்ந்து உட்கார்ந்தாள். காற்று நுகர்ந்த மேலாக்கின் இடதுபுறச் சேலை நுனியைச் சரிசெய்தாள். வெய்துயிர்ப்பு வெடித்தது.

அவளுடைய செய்கை ஒவ்வொன்றிலும் 'மாறுபட்ட உணர்ச்சி'யை யூகம் செய்ய வேண்டியவரானார் அவர். தவசீலி 'குந்தவ்வை' என்ற மாற்றுப் பெயருடன் அனுப்பியிருந்த கதையில், "பெண் சர்வ வல்லமை படைத்த மகாசக்தி, தன் சுதந்திரக் கனவு சிதையக் கண்டால், ஊழிப் புயலாக உருமாறவும் தயங்கமாட்டாள். அப்புறம் அவள் காளிதான்!" என்று கதையை முடித்திருந்த வரிகளில் தம் நினைவைச் செலுத்தினார். 'நான் பெரிதும் அனுபவித்த இவ்வரிகளுக்கு இந்தக் கன்னிப் பெண்ணே விதியாகி விடுவாளோ?" கடந்த கால எண்ணங்களின் தொடர்பு அறுபடத் தக்க நிலையில் அவர் ஊசலாடினார். முதன் முதலாக, தவசீலியின் கடிதத்தைப் படித்தபோது, இனம் தெரியாத மகிழ்ச்சியில்