பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 123


திளைத்த நிகழ்ச்சி ஊர்ந்தது; 'நீங்கள் என் தெய்வம்போல, ஏன் நீங்களே என் தெய்வம். என் கனவை வாழவைக்கும் அந்தஸ்து உங்கள் ஒருவருக்கே உண்டு! ஆமாம், நீங்கள் என் ஆண்டவன்! என்று சுட்டிக் காட்டியிருந்த அந்தக் கடிதத்தின் உட்பொருளும் இப்போது அவருக்குப் புரிந்தது. இந்தப் பெண் இங்கு முன்பு வந்த சமயத்தில், அவளது வெள்ளை மனத்தால் ஈர்க்கப்பட்டு, 'தவசீலி, உங்களை எனக்கு நிரம்பவும் பிடித்துவிட்டது!’ என்று சொல்லப்போக, 'ஆஹா, நான் பாக்கியவதி!' என்று மண்முட்டிய ஆசையுடனும் விண்முட்டிய கனவுடனும் நகை பூத்துத் திளைத்த சம்பவம் தவழ்ந்தது. பின்னர், பட்டணத்தில் ஏற்பட்ட சந்திப்பில், "என் நெஞ்சை உங்களிடம் ஒரு நாள் திறந்து காட்டினால்தான் ஸார், எனக்கு ஆத்ம திருப்தி ஏற்படும். உங்களை என் ஆயுள் பூராவும் மறக்க மாட்டேன் ஸார்!” என்று பூடகமாகவும் முன் எச்சரிக்கையுடனும் மொழிந்த காட்சியும் விரிந்தது. அதற்குள் தவசீலி தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "எல்லாம் தெரியும் ஸார்!" என்று பூடகமாகவும் முன் எச்சரிக்கையுடனும் மொழிந்த காட்சியும் விரிந்தது.

அதற்கும் தவசீலி தொண்டையைக் களைத்துக் கொண்டு, "எல்லாம் தெரியும் ஸார்!" என்று முத்தாய்ப்பு வைத்தாள்.

இம்முடிவைக் கேட்டவுடன், ஞானசீலனின் கண்களில் சாணைக் கல்லில் தம்பிக் கோட்டை வீச்சரிவாள் உரசும் பொழுது பறந்து சிதறுமே தீப்பொறிகள், அம்மாதிரி, விரிந்து படரலாயின. "தெரிந்துமா இப்படி என்னைச் சோதிக்கத் தலைப் பட்டீர்கள் ?"

கண்களும் கண்களும் மோதின.

"உங்களை-என் ஆண்டவனைச் சோதிக்கும் தைரியம் எனக்கு ஏது ஸார்?"