பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 139


என்னைப் பைத்தியமாக்கக் கங்கணம் கட்டியிருக்கிறது விதி.

என்னை ஏமாற்றும் சக்தி அந்தக் கடவுளுக்குக் கூட இருக்க முடியாது.

ஐயோ! என் இல்லற வாழ்க்கையிலும் இலக்கிய வாழ்க்கையிலும் நான் கண்ட கனவுளையெல்லாம் தவிடுபொடியாக்கி விட்டாயே நீ?

நீதான் விதியா? இல்லை, நீதான் தெய்வமா?

நீ என் உடைமையாகக் கனவு கண்டு கொண்டிருப்பாய்! பாவம்!

என்னை மன்னித்துவிடு!

பாவம், வாணி !

ஞானசீலன்."

உறையை உதறினாள் தவசீலி.

மற்றொரு துண்டிக் கடிதம் விழுந்தது. வாணியை நாடியது.

"அன்பிற்குரிய வாணி !

நீ என் தெய்வம். இந்தக் கலியுகத்திலே தெய்வத்தை நான் கண் முன் கண்டு கொண்டேனே, அதற்கு நான் பூர்வ ஜென்மத்தில் தவம் இயற்றியிருக்கத்தான் வேண்டும். உன்னை அழித்துக் கொண்டு, உன் தோழியை வாழவைக்கத் துணிந்த தியாகசீலி நீ; நன்றிக்குக் கிட்டிய இலக்கணம் நீ!