பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149பூவை. எஸ். ஆறுமுகம்


உன்னைப் புகழ அருகதை அற்ற பாவி நான் ! கோழை நான்!

இப்பிறப்பில் உன்னை என் உயிரின் மறுபாதியாக அடையக் கனவு கண்டேன். முடியவில்லை. அடுத்த பிறப்பிலேனும் உன்னை அடையத் தவம் செய்வேன். அதற்காகவேதான், இப்பூவுலகிலிருந்து சற்றைக்குள்ளே விடைபெறப் போகிறேன்.

என் திருமணம், ஆம்; நம் திருமணம் பூலோகத்தில் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் என் திருமணம்-ஆம்; நம் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட வேண்டுமென்பதுதான் தெய் வத்தின் திருவுள்ளம் போலும்!

அடுத்த பிறவியில் என் கனவுகள்-ஆம்; நம் கனவுகள் ஈடேறுவது நிச்சயம்! ஆண்டவன் நல்லவன்!

எனக்கு விடை கொடு! வர்ணி, மறந்து விடாதே! என் அன்னையின் உயிருக்கு நீதான் காவல் இருக்க வேண்டும்!

ஞானசீலன்"

தீபத் தட்டில் எரிந்து, பின் அணைவதற்குத் துடிக்குமே சூடன், அது போன்று வாணி துடித்தாள்; துவண்டாள்! கண்ணிரைத் துடைத்துக் கொண்ட பிறகு, தவசீலியையும் ஞானசீலனையும் கரம் பற்றினாள்; ஞானசீலனின் வலது கையுடன் தவசீலியின் இடது கையைப் பிணைத்துச் சேர்த்தாள். ஆனந்தமாக வாய் விட்டுச் சிரிக்கத் தொடங்கினாள் வாணி !