பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 141


மிதந்த காற்றில் அலைந்தாடிய நாள்காட்டியைப் பார்த்தவாறு, நாணம் பூத்து-நகைபூத்து நின்றாள் தவசீலி. கையை விடுவித்துக் கொண்டு, ஞானசீலனின் செவிகளில் ரகசியமொன்றை ஒதினாள். பின்னர் மகிழ்ச்சி ரதமேறி வாணியின் பக்கம் போய் இறங்கினாள். அவள் காதுகளிலும் அந்தரங்கம் பேசினாள். அவளது கன்னங்களைத் தட்டிக் கொண்டே அவளுடைய சம்மதத்தைப் பெற்றாள் தவசீலி! "இப்போதாவது என்னை இதயபூர்வமான பாசத்துடன் ஏற்பீர்களல்லவா அத்தான்?" என்று கண் கலங்கிக் கேட்டாள் அவள்.

"நீ உன்னுடைய முதல் கடிதத்தை எனக்குக் காரியாலயத்துக்கு எழுதினாயல்லவா? அப்போது அதைப் படிக்கப் படிக்க என்னுள் என்னையுமறியாமல் ஊறிக் கொண்டிருந்த இனம் விளங்காத குதுரகலத்தின் உட்பொருள் இப்போதுதான் எனக்கு விளங்குகிறது." என்று ஆனந்தத்தின் ஊஞ்சலை ஆட்டிக்கொண்டே, அவளது இமை நுணிகளைத் துடைத்தார் ஞானசீலன்!

21. பூலோகச் சொர்க்கத்தில் மூவர்

ஆறுமுகக் கடவுள் சந்நிதியில் வைக்கப்பட்டிருந்த பீங்கான் தட்டில் மூன்று ஜோடி மனமாலைகள் வைக்கப் பட்டிருந்தன.

தியாகமும் கடமையும் வாணியாகவும், தவசீலியாகவும் உருக்கொண்டு கூத்து நடத்திய அதிசயத்தில் திளைத்தவாறிருந்த கதாசிரியர் ஞானசீலன் தம்முடைய கையில் இழைந்த மங்கல நாண் இரண்டையும் பார்த்துப்