பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 29



வந்தாள் கோசலை அம்மாள். "தம்பி, இவங்க நமக்குத் துரத்துச் சொந்தம். சொந்த ஊர் திருவாரூர். நான் ஒரு நாள் உன்னிடம் சொல்லியிருக்கேன் பார், கமலாட்சி என்று, அது இவங்க பெண்தானாக்கும்!" என்று முன்னுரை வைத்தாள்.

ஒப்புக்குச் சிரிப்பை வெளிக் காட்டினார் ஞானசீலன்.

"தம்பி, எனக்கோ வயசாகிடுச்சு. எனக்குக் கமலாட்சி தான் ஊர், உலகம் எல்லாம். என் சொத்து பூராவுக்கும் அவளே வாரிசு. உங்க ஜாதகத்தையும் கமலாட்சி ஜாதகத்தையும் பார்த்ததில், கனகச்சிதமாகப் பெட்டியும் பேழையுமாப் பொருந்தியிருந்தது. உங்க சம்மதத்தை அறிஞ்சுக்கிட்டுப் போகத்தான் வந்தேன்," என்றார்.

"நல்லது." என்றார் ஞானசீலன்.

கோசலை அம்மாள் காப்பி பலகாரம் கொண்டு வந்தாள். அவள் திரும்புகாலில், மகனை அழைத்தாள். "இந்தாப்பாரு, தம்பி, இந்தப் போட்டோப் படத்தை!" என்று சொல்லி, ஒரு நிழற்படத்தை நீட்டினாள். முன் பிறப்பின் நிழல் தொடர்ந்து வருவதைப் போன்றதொரு ஞாபகம் ஏற்பட்டது அவருக்கு. படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தார். தொடுத்த நயனங்களை அவரால் எடுக்க முடியவில்லை. அழகு என்றால் அப்படியொரு விசித்திரமான அழகு. அழகில் கவர்ச்சியும், கவர்ச்சியில் அழகும் சமபங்காகச் சொட்டின. "இதுவரை நூற்றுக்கணக்கான பெண்களின் அழகை வர்ணித்திருக்கிறேன் நான். ஆனால், இது போல ஓர் அழகியை நான் ஏன் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை ? அப்படியென்றால், என்னைவிட-என் கற்பனாசக்தியைக்