பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 35



"ஆமாம், ஆமாம்!"

"எங்கே ஸார் என் கதையைப் போடப் போறீங்க?... குப்பைக் கூடையிலா?." என்று பட்டு நறுக்கின மாதிரிக் கேட்டு விட்டாள் அவள். இப்பொழுது அவளது சிந்துாரக் கன்னங்களிலே நகைப்பு இல்லை; மொழி பேசும் விழிகளிலே குறும்பு இல்லை; நாணம் ஊறிய உதடுகளிலே நமட்டுச் சிரிப்பு இல்லை. இவை யெல்லாம் இருந்த இடத்தில் வேதனை இருந்தது; வெய்துயிர்ப்பு இருந்தது; ஆற்றாமை இருந்தது.

பெண்மையின் கண்ணிர் எழுத்தாளரைச் சுண்டி இழுத்தது.

"தவசீலி, உங்களை எனக்கு நிரம்பவும் பிடித்து விட்டது!"

"அப்படியா? நிஜமாவா ஸார் ஆஹா, நான் பாக்கியவதிதான் ! என்னைப் போல அதிர்ஷ்டம் கெட்டவள் இந்த உலகத்திலேயே யாருமில்லை என்றிருந்தேன், அது தப்புங்க. என்னைப் போல அதிர்ஷ்டம் உள்ளவ இப்ப யாருமே இருக்க முடியாதுங்க. அப்படியானா, என் கதைகள் உங்க மனசுக்குப் பிடிச்சிருக்குதா? உடனேயே எனக்கு வேலை கொடுப்பீங்க, இல்லையா?" என்று ஆர்வம் கொப்புளித்த நெஞ்சை வெளிக்காட்டிப் பேசினாள். மேலாக்குச் சேலைத் தலைப்பை இழுத்து மூடிக்கொண்டே, நெற்றியில் புரண்ட கார்குழலை ஒதுக்கிவிட்டாள்.

ஞானசீலனின் விழிகள் அசந்து போய் விட்டன. அரைக் கணச் சிந்தனைத் தவிப்பு மாறியது. "தவசீலி, நீங்க என்ன வெல்லாமோ சொல்லுறீங்களே? என்ன சமாச் சாரம்? புரியும்படி சொன்னால்தானே எனக்கும் புரியும்," என்றார்.