பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


அவளுக்குத் தேள் கொட்டினாற் போலிருந்தது. “என்ன ஆசிரியர் ஸார் இப்படிக் கேட்கிறீங்க? அப்படி யானா, என்னுடைய தபால் ஒன்று சென்னைக்கு உங்கள் பத்திரிகை ஆபீசுக்கு வரலையா?...” என்று வினவினாள்.

“இல்லையே!” என்று முகத்தைக் கவிழ்த்தவாறு, பதிலிறுத்தார் துணை ஆசிரியர்... “என்ன சேதி?”

“சேதி இதுதான்!” என்று கூறி முடித்துவிட்டு, பிறகு, கையுடன் கொண்டு வந்திருந்த கடிதத்தை நீட்டினாள்.

மேலெழுந்த வாரியாகப் படிக்காமல், உள்ளழுந்திப் பார்த்தார் அவர், “என்னாலானதைச் செய்கிறேன். நான் பட்டணம் போன கையோடு உங்களுக்கு விவரமாக லெட்டர் எழுதுகிறேன்,” என்றார்.

“சரி, நான் போய் வருகிறேன்.”

அவள் சொல்லி வாய் மூடவில்லை.

ஆலயமணி ஒலித்தது.

‘இருங்கள். சாப்பிட்டு விட்டுப் போகலாம். ஒரு மணிக்குத் திருச்சிக்கு வண்டி இருக்கு!”

‘நன்றிங்க ஸார். அங்கே அப்பா என்னைக் காணாமல் தவிச்சுக் கிட்டிருப்பாங்க. வணக்கம். நான் போயிட்டு வாரேனுங்க” என்று கைகுவித்து விடைபெற்று வெளியேறப் டோன தருணத்தில், “உங்களை உங்க அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க” என்று ஒரு பெண் குரல் கேட்கவே, ஞானசீலன் திரும்பினார்.

வாணி நின்றாள். மாறி மாறி, மாற்றி மாற்றிப் பார்த்துப் பிரிந்த

பாவையர் இருவரையும் கண் வீசிப் பார்த்தார் அவர், சிரிப்பு வெடித்தது!