பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


மனிதாபிமானம் விழித்திருக்க, சாடும் தொல்லைகளைச் சாடி ஓட்டும் துணிவுமிக்க அகங்காரம் துடிப்புப் பெற்றிருக்க வேண்டும்.

எல்லாம் இருந்து விட்டதால் மட்டும், தவம் தகுதி கண்டு விடுமா? இல்லை, தகுதியைத்தான் காட்டி விடுமா?

ஒருக்காலும் இல்லை.

மனிதாபிமானம், உணர்வு, விழிப்பு, துணிவு போன்ற எல்லா விதமான துணைச் சக்திகள் மட்டும் இருந்து பிரயோசனம் கிடையாது. மனித மனத்தில் அகப்பட்டுக் கொண்டு விழிக்கும் அந்த ஹிருதயத்திற்கு ஈவு, இரக்கம், கருணை, பாசம், பண்பு, அன்பு, ஆதரவு, அணைப்பு, பரிவு, ஒழுகிப் போதல், தட்டிக் கொடுத்தல் போன்ற வித்விதமான குணப்பாகுபாடுகள் சங்கமிக்க, அதன் விளையாட்டாகப் புயல் விளைத்து, தென்றல் வீசச் செய்து, அனைத்திற்கும் ஈடு கொடுத்து, இறுதியில் புடமிட்ட பொன்னாக இந்தப் பொன் மனம் இலங்க வல்ல வல்லமையும் பக்குவமும் கைவரும் பொழுதுதான், மனம் மாண்பு பெறுகிறது.

கதைப் படைப்பாளர் ஞானசீலன் தூங்காத மனத்துடனும், தூங்கி வழிந்த விழிகளுடனும் அல்லாடிக் கொண்டே சாய்மானப் பெஞ்சில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்திருந்த அவரது நெஞ்சத்தில் புதிது புதிதான நினைவுகளும் சிந்தனைகளும் இடம் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டன. காற்றாட அமர்ந்தவருக்குக் காற்றின் இதமான அணைப்பு அனுசரணையாக இருந்தது. மடிப்புக் கலையாத சட்டையைத் தன்னுடைய தோல் பெட்டியில் பத்திரப் படுத்தி வைத்துவிட்டு, ‘டர்க்கி டவலை’ எடுத்து பனியன்