பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 47



மூடிய உடம்பில் போர்த்திக் கொண்டார்; பிறகு அதை எடுத்து நாட்டுப் புறத்தானை நினைவூட்டும் பாணியில், தலையில் சுற்றிக் கொண்டார். நினைவுகள் சுற்றிய மனத்தைச் சுற்றி, சிகரெட்டுப் புகைச் சுருள்களும் சுற்றலாயின.!

காலத்தையும் தூரத்தையும் தன்னுடைய இரும்புச் சக்கரங்களில் போட்டு மிதித்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தது அந்த ரெயில் வண்டி.

ஞானசீலனுக்குக் கொட்டாவி வந்தது. அன்னை அன்புடன் போட்டுக் கொடுத்து அனுப்பிய காப்பியை பிளாஸ்கிலிருந்து ஊற்றி, வாயில் ஊற்றிக் கொண்டார். கிறக்கம் தெளிந்தாற் போல ஒரு பிரமை. ஆனால் தெளிவடையாத மனப் பிரமையினுள்டே, அவரது கண்கள் சுற்றிச் சூழ நோக்கின.

ஒருபுறம் புதுமணத் தம்பதி, அவள் ஆசைக் கனவுகளைத் தன்னுடைய அழகு மிளிர்ந்த இதழ்க் கரையில் நெளிய விட்டவாறு, நாணம் குமிழ் பறித்த பாவனையுடன், காஞ்சிப் பட்டுச் சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு, மஞ்சள் தாலியை மட்டும் தங்கக் கழுத்தில் பொற்புக் காட்டித் தவழவிட்ட வண்ணம், துரங்காமல் துரங்கிக் கொண்டிருந்தாள். அவளது கோழித் துரக்கத்தைக் கொத்திப் பதம் பார்த்து ரசிக்கும் சேவலாக மாறிய அவள் கணவன், பரம ரசிகனாக மாறிவிட்ட பெருமை பிடிபடாமல் பிடியெனக் காணப்பட்ட அவள் எழிலை மாந்தித் திளைத்துக் கொண்டே யிருந்தான். உன்னை எனக்கு அர்ப்பணம் செய்தாய் நீ. ஆகவே, என் உறக்கத்தை நீ எடுத்துக் கொள். வாழ்வின் பரிவர்த்தனை இப்படியாக நம்முள் மலரட்டும்;