பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


மணக்கட்டும்,’ என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்திருக்க வேண்டும்!

மறுபகுதிக்குத் திரும்பினார்.

எழுபதைத் தாண்டிய அயர்வில் களைத்துச் சளைத்துக் கிடந்த கிழத் தம்பதி இருவர்; அவர் தலை அவள் மடியில் கிடந்தது. ‘லொக் லொக்’ என்ற இருமல் தாலாட்டுப் பாடியது. இல்லாவிட்டால் பெரியவருக்குத் தூக்கம் பிடிக்குமோ?

வேறு கோணத்திலே கிராமப்புறத்துக் காதலர்கள் வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டு, தொட்டுத் தொட்டுப் பேசிப் பேசி, சிரித்துச் சிரித்துக் காலத்தையும் தூரத்தையும் கடந்து கொண்டிருந்தார்கள்.

சிரிப்புத் தோன்றும்வரை, வாழ்க்கையும் ஆனந்தமான பொழுது போக்காகத்தானே தோன்றும்!

விடிவெள்ளி முளைத்தது.

செங்கற்பட்டு அவருக்கு ஒரு கப் காப்பி ஈந்தது. காப்பி சுவையின் இனிய நைப்புணர்ச்சியை எண்ணிப் பார்த்தவராக அவர் சிகரெட்டுப் புகையின் தடத்தில், ரெயில் எஞ்சின் புகையை இரண்டறக் கலந்துவிட்டுக் கொண்டே, வழி மடங்கி, தான் அமர்ந்திருந்த பெட்டியை நாடிய நேரத்தில் “ஆசிரியர் ஸார்!” என்னும் விளிப்புக் கேட்கவே, சிகரெட்டை உள்ளங்கையில் மறைத்துத் திரும்ப, அங்கே தவசீலி நிற்கக் கண்டார்.

“வணக்கம்! வணக்கம்!” என்று சொல்லி, தரையில் பாதிப் பார்வையையும், தரைமீது நின்ற தவப்பெண்ணைப் பாதிப் பார்வையுமாகப் பார்த்தார்.