பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 49



"அப்பாவுக்கு ரொம்பவும் முடியவில்லை. பட்டிணத்திற்கு ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அழைச்சுக்கிட்டுப் போறேன், ஸார்!"

ரெயில் ஊதியது.

ஊதிய துயரத்தை ஊதி அணைக்க முடியாத நிலையில், "அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். பட்டினத்தில் அவசியம் என்னை வந்துபாருங்கள்," என்று கேட்டுக் கொண்டு சிகரெட்டுத் துண்டை வீசிவிட்டு, துண்டினால் முகத்தைத் துடைத்தவாறு வண்டியைச் சரண் புகலானார் ஞானசீலன்.

பாரதிதாசனார் நறுக்கு மீசை திகழ, புரட்சிப் பார்வையுடன் காணப்பட்டார்.

'கவி வாணர்களுக்குக்கூட ஸ்டார் சில சமயங் களிலே மட்டுந்தான் அனுசரணையாக அமைகிறது:

பாடினார் புரட்சிக்கவி,

"சோலையிலோர் நாள் எனையே
தொட்டிழுத்து முத்தமிட்டான்;
துடுக்குத் தனத்தை என் சொல்வேன்?

மாலைப் பொழுதில் இந்த மாயம் புரிந்த செம்மல்
வாய்விட்டுச் சிரித்துப்பின்

போய்விட்டானேடி தோழி!

கவிதை இன்பம் மனத்துக்கு விருந்து வைத்தது. முறுவல் இதழ்க் கங்கில் குறுஞ் சிரிப்பைப் பெய்வது இயல்புதானே? -

யார் யாரைப் பற்றி யெல்லாமோ எண்ணித் திளைத்த அவரது மனக்கண்முன், மனக்கடல் ஆர்ப்பரித்து முழங்கிய காட்சி ஏடு விரிந்தது.

தி.சொ.நி.-4