பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 61


கிட்டத்தட்ட, மூன்று வருஷங்களுக்கு முன்பு மணிமுத்து வேலாயுதம் மனம் விட்டுப் பேசிய பேச்சின் ‘தாத்பரியத்தை’ அடிக்கொரு முறை நினைத்துக் கொள்வார் ஞானசீலன். உறவும் உரிமையும் ஒட்டிவர எண்ணுகையில், எட்டி நிற்கக் கூடாது. அன்பு மனம் அழியாதது; அழியக் கூடாது! இந்த மனித மனம் அழியாமல் பாதுகாப்பதற்கு அம்மாதிரியான உறவும் உரிமையும் பரிவர்த்தனை செய்து கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான், பணத்தையும் கடந்து நிற்கும் பவித்திரமும், பண்பைக் கட்டிக் காக்கும் பாத்தியமும் வழிகாட்ட முடியும் என்று ஓரொரு சமயங்களில் குறிப்பிட்டிருக்கிறார் அவர் என்றால், அதற்கு உதாரணம் தந்து, உத்தாரணம் தந்த மனிதர் மணிமுத்து வேலாயுதம் அவர்களே. தம் முதலாளியைப் பற்றி அவருக்குப் பொதுவாக உயர்ந்த அபிப்பிராயமே நிலவி வந்தது.

இந்த அடிப்படையான மன உணர்ச்சிச் சுழிப்புடனேயே, படுக்கையை விட்டு எழுந்து, பிரஷ்பேஸ்டிற்குக் கடமையைச் சுட்டிவிட்டு, மண்ணடித் திருப்பத்தில் பவழக்காரத் தெரு கூடு முனையிலிருந்த உடுப்பி கமலா பவனத்தில் ஒரு கப் காப்பியைச் சூடுபறக்க ஊற்றிக் கொண்டு திரும்பினார்.

தெரு, தெரு விளக்குகள், தெரு மனிதர்கள்!-முக்கோணத்தில் உறக்கம் ‘ராசாங்கம்’ நடத்திய வேளையில் ஞானசீலன் எழுதவேண்டியவைகளை எழுதி முடிக்க வேண்டுமென்ற உடல் தினவுடனும் மன எழுச்சியுடனும் விரைவாக அறை மாடிக்குத் தாவி அறையில் வந்து அமர்ந்தபோது, எப்படியோ தம் உரிமையாளரைப் பற்றிய நினைவுகள்தாம் பாலாடை போலப் பரவிக் கிடந்தன. சென்ற வாரம் நான் மணிமுத்து வேலாயுதம்