பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 71


இலக்கியப் பூவுலகம் சுழன்றது.

சிற்றின்ப நுகர்ச்சியை எழுப்ப வல்ல ஆபாசக் கதைகள் எழுதி ‘சல்லிசான அற்பப் புகழ்’ சம்பாதித்தவர்களிலிருந்து அயல்மொழிக் கதைகளை நாசூக்காகத் திருடி, ஆனால் அந்தத் திருட்டில் மாட்டிக் கொள்ளாமல், அல்லது அந்தத் திருட்டை ரகசிய ஒப்பந்தத்துடன் செய்து துணிவுடன் முன்னேறிய ‘இரவல் புகழ்’ ஆசாமிகள் வரையிலும் பேச்சு நடந்தது.

“இவர்களைப்பற்றி நாம் கவலைப்படுவதும், எங்கள் பத்திரிகையில் எழுதுவதும் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, இன்றைய நிலையிலே, பொது ஜன ரசிகர்கள் இருக்கிறார்கள் பாருங்கள், அவர்கள் ரொம்பவும் விழிப்புடன் இருக்கப் பழகி விட்டார்கள். இதோ பாருங்கள், சில ரகசியக் கடிதங்கள். அன்பர்கள் குறிப்பிட்டுள்ள இலக்கியத் திருட்டு ரகசியத்தை எப்போதோ, நான் அறிந்தவன். இங்கே பாருங்கள், இந்த அயல் மொழி நூல்களை. இவற்றைத் தமிழாக்கி வெளியிட அனுமதி கோரியிருக்கிறேன். அனுமதி பெற்று, இவற்றை வெளியிட்டால் ஐந்தாறு பேர்வழிகளின் புகழ் ஆலாய்ப் பறந்துவிடும்!... இப்படிப் பட்ட ரசிகர்களின் ‘தைரியத்தை’ப் பார்க்கையில்... எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது!”

“வாஸ்தவம்தான் ஸார். புதுமைப்பித்தன் கூடப் பிறர் கதைகளைத் திருடுவதைப்பற்றி...”

"தெரியும், தெரியும்!-புதுமைப்பித்தன் தலைசிறந்த கதாசிரியர். என் வணக்கத்துக்குரியவர். என்றாலும், சிருஷ்டி முடிச்சுக்குக் கட்டுப்பட்டோ என்னவோ, அவர் பெயரிலும்கூடச் சில்லறைக் குற்றச்சாட்டுகள் இருக்-