பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 73


ஒரு கதை பளிச்சென்றிருந்தது. ‘குந்தவ்வை’ என்று பெயருடன் கூடிய கதாசிரியையின் கற்பனை அது. யாருமற்ற அருமைப் படைப்பான அபலையின்கதை அது. பிரசுரத்துக்குத் தேர்வு பெற்றிருப்பதாகக் கடிதம் அனுப்பச் செய்து விட்டு, போனோக்ராம் ஒன்று அனுப்பவும் ஏற்பாடு செய்தார் ஞானசீலன்.

செய்தி: “வருகிற வெள்ளிக்கிழமை புறப்படுகிறேன். பிற நேரில். ஞானசீலன்.”

13. யார் இந்தக் குந்தவ்வை?

ருஷ்ய நாட்டுச் சிறுகதைத் தொகுப்பின் முதல் ஏட்டைப் புரட்டிய பொழுது, ஞானசீலன் எழும்பூர் சந்திப்பைக் கண்டார். அந்தப் புத்தகத்தின் கடைசி ஏட்டைப் படித்து முடித்தபோது, தஞ்சாவூர்ச் சந்திப்பைத் தரிசித்தார். விழுப்புரத்தில் வாங்கிய தமிழ்ப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருக்கையில், அச்சுப் பிழைகள் மிகுந்த ஒரு பகுதியைத் திரும்பத் திரும்பப் படித்தார். அச்சகமொன்றில் பிழைதிருத்தும் குமாஸ்தா ஒருவன், தன் பெயரும் ஒரு புத்தக அட்டையில் வர வேண்டுமென்று ஆசைப்பட்டு, அந்த அச்சகத்தில் வேலைக்கு வந்திருந்த மற்றொரு பிரபலமான ஆசிரியரது தொகுப்பின் மேலட்டையில் அவர் பெயருக்குப் பதிலாகத் தன் பெயரை கம்போஸ் செய்து அழகு பார்த்து அமைதி பார்த்த விந்தைக் கதைதான் அவருக்கு மனதில் பளிச்சிட்டது. கண்களை மூடிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார். தமிழ் இலக்கிய உலகம் சுழன்றது. ‘ம்..இந்த ரஷ்யநாட்டுக் கதையைத் திருடிக்கூடத் தமிழில் எழுதித்-