பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் செர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ❖ 79


அம்மாவிடம் கொடுத்துக் கொடுக்கச் சொல்வதை அவர் விரும்புவாரா? -

"வாணி, என் தந்தி கிடைத்ததல்லவா?"

"ஓ...."

"நல்லது."

"தந்தியைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன்!"

"நல்ல விஷயத்தை இன்னும் கொஞ்சம் விரைவாக உனக்கு எட்டச் செய்ய ஆசைப்பட்டேன். நீ சொல்வதும் நியாயம்தான். பிறகுதான் எனக்கு நினைப்பு வந்தது, நீ பயப்படுவாயே என்று!...

"ஒரு சேதி!"

"சொல்லக் கூடாதா?"

"பூ வாங்கி வந்திருக்கிறேன்!"

"யாருக்கு?"

"உனக்குத்தான்!"

"கொடுங்களேன்!"

"பேஷ், பேஷ்!"

இளம் பொற்கிரணங்கள் வெண்சாமரம் வீச, அருமைக் கனவுகள் ஆரத்தி எடுக்க, அன்னப் படகில் அமர்ந்து ராஜவீதியைச் சுற்றிலும் பவனி வரும் அரசிளங் குமரிகட இந்த வாணியிடம் தோற்றுப் போகத்தான் வேண்டும்! - இப்படி எண்ணியபடியே, பூவைக் கொடுத்தார்.

பூமணம் குழ வியாபித்தது.

மலையாள நாட்டு டாக்டர் பாஸ்கர் ஒரு சமயம் சொன்ன வடக்கன் பாட்டு ஒன்று அவருக்கு மனப்பாடமாகியிருந்தது.