பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்



"...வயநாடன் மஞ்சள் முறிச்ச போலெ
குன்னத்துக் கொன்னையும் பூத்த போலெ
இளமாவின் தய்யு தளிர்த்த போலெ
கதிரவனாய தின் வர்ணம் போலெ

எந்து நிறமென்னு சொல்லேண்டு ஞான்!..."

வாணிக்காகத்தான் அப்பாடலைக் கேட்கும் சந்தர்ப்பம் கைகூடியதோ? வயநாடன் மஞ்சள் தேய்த்ததும் ஒளிர்வதைப் போலவும், குன்றில் ஒளிரும் கொன்றைப் பூவைப்போலவும், இளமாந்தளிர் போலவும், கதிரவனின் செந்நிறம் போலவும் இருந்தாளாம் அந்த அழகி 1. ஏறக்குறைய அர்த்தம் பொருந்தியிருந்தது போலவே பிரமை, எப்போதோ கேட்ட பாட்டு.

'இந்த அழகிக்கு என் வாணி குறைந்தவளா என்ன? ஊஹாம், ஒரு பொழுதும் இல்லை!...' என்று எண்ணிப் பெருமைப்பட்டு, அந்தப் பெருமையில் பெருமிதம் கண்ட சமயத்தில், 'காதல் என்பது சிறுபிள்ளை விளையாட்டுப் போல' என்று தம் தொடர்கதையில் குறித்த வாசகம் நினைவில் புரண்டு கொடுத்ததைச் சட்டை செய்யாமல், புரட்டி விட்டவாறு, தம் சட்டையை உதறிக்கொண்டே எழுந்து மீண்டும் குரிச்சியில் சாய்ந்து ஏப்பம் ஒன்றைத் துல்லியமாக வெளியேற்றினார்.

வாணியின் மோகம் மண்டிய விழிகளில் குளித்து நெஞ்சம் புகுந்து மீண்டும் திரும்ப விரும்பினார் ஞானசீலன். அவ்வாறே செய்யவும் செய்தபோது, அவருக்குக் கடல் முத்துப் போலச் சிந்தனைகள் சில கிடைத்தன. அவர் தமக்குத் தாமே முணுமுணுத்துக் கொண்டார்.