பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ✽ 81




1.கனவுகள், நெஞ்சத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன; ஆனால், திருமணங்களோ சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!

ஆசைகள் கனவுகளில் நிச்சயிக்கப்படுகின்றன; ஆனால், திருமணங்களோ மண்ணில்தான் நிர்ணயிக்கப்படுகின்றன !

கண்ணும் கண்ணும் பேச, வாணி ஞானசீலன் இருவரும் வாய்மூடி மெளனிகளாயினர். அந்த நாளிலே, மாமல்லரும் சிவகாமியும் கட்டுண்டிருந்ததாகக் கல்கி' வர்ணித்தார் அல்லவா, அம்மாதிரியாக!.

கோசலை அம்மாள் வந்தாள். வந்து, வைகாசி முடிவில் திருமணத்தை முடித்துவிட வேண்டுமென்றாள். வாணியின் தந்தை கோதண்டபாணியும் 'உம்' கொட்டினார்.

வாணி புறப்பட்டாள்.

நெஞ்சில் இடம்பிடித்திருந்த நேரிழையாள் வாணி. அவ்வளவு லகுவாகப் புறப்பட்டுப் போய்விட விடுவாரா, என்ன?.

ஞானசீலனைப் பார்க்கச் சரபோஜி மன்னர் கல்லூரித் தோழர்கள் வந்தார்கள். எல்லோரும் அந்திமாலையில் காப்பி சாப்பிட்டுவிட்டு மணிக்கூண்டில் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்கள். டிராயிங் மாஸ்டரும் சிறந்த எழுத்தாளருமான லட்சுமணன், லேடி டாக்டர் மகன் எத்திராஜ், கணித ஆசிரியர் சண்முகசுந்தரம், பாப்புலர் டயர் கம்பெனி மானேஜர் ஆகிய ஜமா சேர்ந்தது. அவரவர்கள் விடை பெற்றதும், வழக்கமாகச் சந்திக்கும் கலெக்டர் ஆபீஸ் பெண்ணையும்

தி.சொ.நி.-8