பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன✽91



இவர்தான் கதாசிரியர் ஞானசீலன். ஸார், உங்களுடைய கதைகள்னா, என் பெண்ணுக்கு ஏகப்பித்து ஸார்!...”

அந்தப் பெண் கமலாட்சி, ஞானசீலன் என்ற நாமத்தைக் கேட்டவுடன், எழில் மிகுந்த லாகவம் சொட்டிய பூக்கரங்களை நளினம் சேர்த்து உயர்த்தி, “வணக்கம் ஸார்!’ என்றாள்.

ஞானசீலன் இயந்திரகதியுடன் பதிலுக்கு வணங்கினார். ஆனால் அவரது உள்மனம், அன்றொரு நாள் இதே பெரியவர் வந்து தம் அருமைத் திருமகளின் போட்டோவை நீட்டியதை நினைவு கூர்ந்த விவரத்தையும், அது சமயம் அப்படத்தைப் பார்த்த சடுதியில் தம் இலக்கிய நெஞ்சம் உள்ளூர அந்த அழகியின் அழகை வெகுவாகப் பாராட்டிப் புகழ்ந்த நடப்பையும் எண்ண மிடலானார். உண்மைதான். அன்று நான் கருதியது மெய்தான். இது மாதிரியான ஓர் அழகியை இதுவரை நான் கற்பனை செய்து பார்த்தது இல்லையே!. அப்படியானால் என் படைப்புத் தொழிலில் நான் தோற்றுத்தான் போய்விட்டேனா ?. அதுவரை அனுபவித்துணர்ந்திராத ஏக்கமும், வேதனையும், அவர் மனத்தை நெகிழச் செய்தன.

ஞானசீலனுக்கு மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டுமென்று துடிப்பு வந்தது; பார்த்தார். கமலாட்சியின் முகத்தில் வாணி தோன்றினாள். உலாவப் புறப்படுவதற்குச் சற்று முன்னர்தான் வாணியை அவர் வீட்டில் சந்தித்தார். ஏதோ ஒன்றைச் சொல்லத் தவிப்பது போலவும், பிறகு அத்தவிப்பு சமனம் ஆகிவிட்டமாதிரித் தன்னடக்கம் கொண்டவள் போலவும் அவள் நின்று, பின், திரும்பிவிட்டாள். இப்படிப்பட்ட இரண்டுங்கெட்ட கட்டத்தில் நின்ற வாணியை நான்கைந்து சந்தர்ப்பங்களில்