பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


அவர் கண்டது உண்டு. ஒவ்வொரு முகக்குறியையும் மனோதத்துவத் தராசினால் எடை போட்டுப் பார்த்துக் கேட்பது என்பது நடக்க வல்ல காரியமா? அவ்வாறு கேட்பதுதான் நாகரீகமா ?

கமலாட்சியைப் பார்த்தார். அதே காலப் பிரமாணத்தில் அவளும் அவரைப் பார்த்தாள். வாணியைப் போல இவளும் ஏதோ சொல்லத் துடித்ததாகவே அவர் உணர வேண்டியவர் ஆனார். இவளிடமும் தான் எப்படிக் கேட்டது?

காற்பெருவிரல் புழுதியில் நகக்கோலம் போட நின்றாள் கமலாட்சி.

“ஸார், வாருங்கள், நம் வீட்டுக்குப் போவோம். வாசலில் வண்டி கிடைக்கும். போய்விடலாம்.” சொல்லும் போது உடம்பு புல்லரித்தது. ஆண்டவனின் சிருஷ்டி மேதா விலாசத்திற்கு ஓர் அத்தாட்சி போல வந்து நின்று தரிசனம் தந்த அந்த அழகுத் தேவதையுடன் ஒரே வண்டியில் அமர்ந்து கொஞ்சப் பொழுது செல்ல நேரிட்டால்கூட, அதுவே தம் பாக்கியம் என்பது அவர் நினைவு. அது அவர் கனவுங்கூட!... வாணி ஒருத்தியைப் பற்றித்தான் அவர் இதுவரை தனிமையில் அமர்ந்து ஒரு தடவைக்கு மேலாக நினைத்து அகமகிழ்வது வழக்கம். ஆனால் இப்பொழுது கமலாட்சியைப் பற்றி ஏன் பலமுறை நினைக்கிறார்?

அடிப்படைக் குறைபாடுகளுடன் கூடிய மனிதனின் மனம் நேரம் – காலம் ஒன்றில்லாமல், சலனப்பட நேருவது இயல்பு.

ஞானசீலன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டார். அதற்குள், பெரியவர் திரும்பி ஞானசீலனை வெளியே கூப்பிட்டார். “மிஸ்டர் ஞானசீலன்! இந்தா-