பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் செர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

93


 ருங்கள் இன்விடேஷன். என் மகளுக்குக் கல்யாணம், விஜயநகரத்தில் மேரேஜ். வைகாசி கடைசியில் தேதி, அவசியம் தங்கள் அம்மாவை அழைத்துக் கொண்டு வர வேண்டும்," என்று சொல்லி முகூர்த்தப் பத்திரிகை ஒன்றையும் நீட்டினார்.

நடுங்கிய கரங்களை நீட்டிப் பெற்றார் ஞானசீலன். கண்களின் கலக்கத்தை அவளுக்கு உணர்த்த விரும்பாதவர்போலக் கலங்கிய விழிகளால் அவளது அந்தப் பேசும் விழிகளைப் பார்த்துவிட்டுத் திரும்பினார். "அவசியம் வருகிறேன்; நம் சொந்தத்தைக் கட்டிக் காக்க வேண்டுமென்பதுதான் என் கவலையெல்லாம்."

தான் இதே பெண் கமலாட்சியை மணம் புரிந்து கொள்ள முடியாதென்றும், வாணிதான் தனக்கு இனி சகலமும் என்றும் அன்னை மூலம் செய்தி அனுப்பியவர் அல்லவா அவர்?.

"வீட்டுக்கு வந்து காப்பியாவது சாப்பிட்டுவிட்டுப் போனால்தான் எனக்கு மனசுக்கு ஆறுதலாக இருக்கும்."

"அதனால் என்ன? இன்னொரு தரம் ஆகட்டும். கமலாட்சிக்கும் அவள் புருஷனுக்கும் ஒரு விருந்து வையுங்களேன், வருகிறோம். இப்பொழுது டயம் ஆகிடுச்சு. கார் பெட்ரோல் போடப் போயிருக்குது. நாங்க இப்படியே கொஞ்ச தூரம் நடந்து போய்க் கொள்கிறோம். வரட்டுமா ?"

அழகி மறைந்தாள்!

அழகு மறையவில்லை!

வந்த நண்பர் படையுடன் திரும்பினார் ஞானசீலன்.

ராஜா மிராஸ்தார் ஆஸ்பத்திரி, தாமஸ் ஹால், பஸ் ஸ்டாண்டு, மணிக்கூண்டு, ஞானம் டாக்கீஸ், டவர் டாக்கீஸ், சாக்கடைத் தேக்கம், கீழ்வாசல் மார்க்கெட்,