பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


குணங்குடி தாசர் ஷர்பத் ஸ்டால் என்று நடை தொடர்ந்தது.

ஞானசீலனும் தொடர்ந்தார்.

அவருடன் அழகும் தொடர்ந்தது.

கீழவாசல் திருப்பத்தில் அவர் விடை பெறுமுன், பஜார் போஸ்டாபீஸ் தெரு வழியாக ஒரு பெண் கடந்து செல்வதைக் கண்டார். பார்த்த முகமாக அது இருந்தது. தவசீலியாக இருக்குமோ என்ற ஐயப்பாடு அவருக்கு.

மசூதியில் எட்டு முறை மணி அடிக்கப்பட்டது.

16. நிரஜா - ஓர் உண்மை!


'னிதனின் பலவீனம்தான் கடவுளின் பலம் போலும்!

பலவீனத்தில் விளைந்த பலத்தின் இந்த மகத்துவம் ஒன்றேதான் சிருஷ்டிப் புதிரின் ரகசியமோ?

அடிப்படைக் குறைகளின் கூட்டு மொத்தப் புள்ளிதான் மனிதன்! – இந்த ஒரு நினைவுதான் ஞானசீலனின் மன அடிவாரத்தில் அடிச்சுவடு பதித்திருந்தது. சலனத்தின் அலைகளில் நீந்தியவாறே அவர் வீட்டை அடைந்து நிலைப்படியில் கால் எடுத்து வைத்தார். அப்பொழுது, உள்ளே அம்மாவுடன் யாரோ பேசும் சத்தம் கேட்டது. குரலுக்கு உருவம் காண முனைந்தார். வாணியாகவே இருக்கும் என்று நம்பி, வாணியாக இருந்திருக்கக்கூடாதா என்று ஏங்கி, இத்தகைய இரண்டுங் கெட்ட நிலையில், அக்குரல் யாருடையது என்று அனுமானம் செய்ய எத்தனம் செய்தபோது, அவரது முயற்சிக்குக் குறுக்கே சில வாசகங்கள் தெறித்துச் சிதறின.