பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 ஏன்?’’ நீங்க புதுக்கோட்டைக்குப் போகணுமின்னிங் களே? அதுக்குக் கைச்செலவுக்கு!’ பொன்னம்மா!' என்றதும், முன்பு கட்டிய கோட்டை தகர்ந்த சம்பவத்தை நினைத்தான் கறுப்பன். இனி என் மவனுக்கு எப்படிக் கண்ணுலம் கட்டி வைக்கப் போறே ன்? கண்கள் கலங்கின : 'சொக்கப்பா! நான் புதுக் கோட்டைக்குப் போகலை!" என்ருன். அப்பொழுது

இந்தாங்கப்பா!' என்று சொல்லி ஏதோ ஒன்றை நீட்டினன் மகன், தந்தையிடம்.

கறுப்பனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இரட்டை வடச் சங்கிலியில் பிணைக்கப்பட்ட அந்தத் திருமங்கல்யம் பளபளத்தது! ஏது தம்பி இது?’ "புது வாத்தியாரு தந்தாரு: பழைய டாக்டர் ஐயா இந்த வாத்தியார் ஐயாவோட ஊர்தானம். கொடுத்தனுப்பியிருக்காங்க!” - "நம்முடையது இல்லையே இது? நான் முந்திக் கொடுத்தது வெறும் தாலிப் பொட்டு மட்டுந்தானே?” -அப்பா! என்னை மன்னிச்சிடுங்க. முதல்லே நான் சொன்னது பொய். இருங்க, டாக்டர் ஐயா கொடுத்து அனுப்பி யிருக்கிற கடுதாசியைப் படிச்சுக் காட்டு கிறேன்! - - சொக்கப்பன் படிக்கத் தொடங்கின்ை