பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 'ஏகாலி கறுப்பனுக்கு, டாக்டர் நாகசுந்தரம் எழுதியது. முதலில் என்னை நீ மன்னித்துக் கொள். என் இதயத்தை எங்கோ அடகு வைத்துவிட்டு, உன்னுடைய மனைவியின் தாலியை அடகாக ஏற்று, நான் உன் பெண்சாதிக்கு வைத்தியம் பார்க்க வந்து அரை குறையாக விட்டுச் சென்ற அந்தக் குற்றம் என்னைப் பல நாட்களாக வாட்டியது. அங்கிருந்து மாற்றலாகி வந்த தும், என் மனைவிக்குத் திடுதிப்பென்று விஷக் காய்ச்சல் வந்தது. அவளுடைய கழுத்தில் நான் கட்டிய தாலி என்னை நோக்கி எக்காளமிட்டுச் சிரித்தது. நான் உன்னிடம் இதயமின்றி நடந்த தவறுதலுக்கு எங்கே தெய்வம் என் தாலியை, என் மனைவிக்கு நான் பூட்டிய மாங்கல்யத்தை என்னிடமே சேர்ப்பித்து என் அன்பு மனை யாட்டியைப் பிரித்துவிடுமோ என்று அஞ்சி அழுதேன். அப்போதுதான் என் குற்றத்தையும் உணரலானேன். என் மனைவி பிழைத்து எழ வேண்டுமென்றும், உடனேயே உன்னிடம் காட்டிய ஈவிரக்கமற்ற தன்மைக்குப் பரிகாரம் செய்வதாகவும் ஆண்டவனிடம் பிரார்த்தித் தேன். என் மனைவி பிழைத்தாள்! அன்றைக்கு என்னிடம் நீ தந்த தாலியைக் கொண்டே அதைக் கொஞ்சம் அழகுபடச் செய்திருக் கிறேன்; தாவியுடன் இணைத்திருக்கிற இரட்டை வடச் சங்கிலிதான் என்னுடைய பரிகாரப் பொருள்!...உன் மனைவி குணமடைந்திருப்பா ளென்று நம்புகிறேன். அடுத்த வாரம் உன்