பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜசிம்மன் கனவுலகினின்று அப்பொழுதுதான் திரும்பி வந்த வரைப்போல, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் முருகையாவின் சந்தோஷம் தழைத்தது; ஒரு கணம் மூக்கின்மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்ட அவர் மீண்டும் அக்காட்சியில் லயித்து விட்டிருந்தார். அவரது இதயச் சுனையில் அன்பு ஊற்று பெருக்கெடுத்தோடியது. கண்ணுடியின் முன் நின்ற சிறுவன் ராஜசிம்மன் இன்னமும் விலகின பாடில்லை. சுருள் அல்ல படிந்த கிராப் மயிரைச் சீர் செய்து, சட்டை காலரைத் தூக்கிவிட்டான் அவன். முகத்தில் ஊடாடியிருந்த முறுவல் இழைக்கோலத் துடன் ராஜசிம்மன் ஓடிவருவதைக் கண்டதும், சாய்ந் திருந்த முருகையா எழுந்து உட்கார்ந்து, "ராஜா' என்ருர். அவன் புன்னகை செய்து நின்ருன். "ராஜா, நீ பள்ளிக்கூடத்துக்குத்தானே புறப் பட்டாய்? எனக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. நெடு நேரம் நீ ஷோக்காய் டிரஸ் செய்வதைப் பார்த்து, ஒரு வேளை எங்கேனும் பெண் பார்க்கச் செல்கிருயோ என்றெண்ணினேன்!” என்று கூறிச் சிரித்தார் அவர். அவரது கேலியை உணர்ந்தவன்போல ராஜசிம்மன் "மாமா, பார்த்திங்களா, நானும் மறந்துட்டேன். ஊம்: நீங்க சொல்ற மாதிரி கொஞ்ச நாளிலே பெண் பார்க்கப் போகத்தானே வேணும்?' என்ருன். ... --