பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


"நிஜமாகவா? ஆச்சரியமிகுதியின் காரணமாக அவர் புருவங்கள் மேலேறி நின்றன. 'உங்களுக்கு ஞாபகமில்லையா மாமா? நேற்று தபால் வந்ததே, அத்தைக்கு இன்னம் இரண்டு நாளிலே பிரசவ மாகி விடுமென்று. அப்போது பிறப்பது நிச்சயம் பெண் குழந்தைதான். அதைப் பார்க்கிறதுக்கு உங்க கூட நானும் ஊருக்குப் புறப்படுவேனில்லையா?” அன்று தபாலில் வந்த நாலு வரிக்கடிதம் அவர் ஞாபகத்திற்கு வந்தது. தாய்விடு சென்றிருக்கும் மனைவி யின் பிரசவம் பற்றிக் கவலைகொண்டிருந்த அவருக்கு, அந்தக் கடிதம் எவ்வளவோ ஆறுதலாகவிருந்தது. இரண் டொரு தினத்தில் சுகப் பிரசவமாகுமென லேடி டாக்டர் சொல்லியிருந்த விவரம் கண்டிருந்தது கடிதத்தில். அதைக்கொண்டு சிறுவனின் பிஞ்சு நெஞ்சில் உருப் பெற்றிருந்த கற்பனையின் போக்கை நினைத்துப் பார்த்த முருகையாவின் மனம் ஆனந்தத்தில் திளைக்க ஆரம் பித்தது. --" "ராஜா, நீ உண்மையிலேயே என் ராஜாதான். உன் வாக்குப்படி அத்தைக்கு ஒரு ராஜாத்தி பிறந்து விட்டால் அவள் உனக்கேதான்! பகவான் அல்லவா அருள்புரிய வேணும்...” சுவர்க் கடிகாரம் மணி அடிப்பதைக் கண்டவுடன் திடுக்கிட்ட பையன், 'மாமா, ஸ்கூலுக்கு நாழியாகி விட்டது. போய் வருகிறேன்.’’ என்று விடை பெற்ருன். முருகையா ராஜாவின் ராஜ நடையைக் கண்டு சொக்கிப் போனர். தன் முன் அணி வகுத்து நிற்கும் போலீஸ் ஜவான்களின் மிடுக்கு நடைகூட ஏனே அப்பொழுது அவருக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை.