பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?0 ஏறத்தாழ ஐந்தாறு ஆண்டுகள் இருக்கலாம். அது சமயம் முருகையா போலீஸ் இலாகாவில் சப்-இன்ஸ்பெக் டராக வேலே பார்த்து வந்தார். இளம் பிராயந் தொட்டு சன்னமாக வளர்ந்தோங்கிய அவரது விளை யாட்டு ஆர்வமும், ஸ்போர்ட்ஸ்மென் விப்'பும் அவரை ஒரு சாம்பியட்னக ஆக்கின. மனிதனின் கருத்துக் கேற்பத்தானே சூழ்நிலையும் அமைகிறது! பி. ஏ. படிப்பு, உத்தியோகம் தேடித் தந்தது. மண வாழ்க்கைப் 'பூங்காவில், அன்பெனும் தென்றல் கிளுகிளுக்க, ஆனந்த மும் அமைதியும் பிரகாசித்து விளங்க, மதுக்குடமேந்தி நிற்கும் மனமலர் போன்ற துனேவி அமைக்கும் சூழ்நிலை யிலே, வாழ்வு அவருக்கு சொப்பன சொர்க்கமாகத் தோன்றியதில் வியப்பில்லை அல்லவா? அன்று இரவு அவர் ஸ்டேஷனிலிருந்து மனேமிதிக்க வெகு நாழி ஆகிவிட்டது. அவர் மனவிளிம்பில் சந் தோஷம் தளும்பி நின்றது. காரணம், அன்றைக்கு அவர் நல்லதொரு கேஸ் பிடித்திருந்தார். கட்டுமாவடி கடற்கரை ஓரத்தில், கள்ளத்தனமாக கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்களைத் தோணியில் ஏற்றி அக்கரைச் சீமைக்கு அனுப்ப எத்தனித்த சமயத்தில், கையும் களவுமாகப் பிடித்துவிட்டார் அந்த மனிதன; கைது செய்யப்பட்ட அவன் லாக்-அப்"பில் வைக்கப் பட்டான். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுடன் இதுபற்றி மேலிடத்துக்கு ரிப்போர்ட் தயாரித்து உடனேயே அனுப்பியும் விட்டார் முருகையா. இந்தக் கேஸ் அவருடைய நெடுநாளைய உழைப்பு, உளவு இவற்றின் துணையால் கிட்டிற்று. பிடிபட்டவனுக்குக் குறைந்தது ஆறு வருஷ தண்டனையாகிலும் கிடைக்கு மென்று எதிர்பார்த்தார்.